Wednesday, 26 September 2018

உலக விண்வெளி வார விழாவையொட்டி பள்ளி, ஐடிஐ மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்

உலக விண்வெளி வார விழாவையொட்டி பள்ளி, ஐடிஐ மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன.

இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாக மேலாளர் ஏ. நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சார்பில் வரும் அக். 4 முதல் 10 ஆம் தேதி வரை உலக விண்வெளி வார விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி,"விண்வெளிச் சுற்றுலா' என்ற தலைப்பில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், "வேற்று கிரகத்தில் ஒன்றுபட்ட குடியிருப்பு' என்ற தலைப்பி 10ஆம் வகுப்புமுதல் பிளஸ் 2 மாணவர்களுக்கும் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருத்தல் வேண்டும். ஏ 4 அளவுள்ள வெள்ளை தாளில் 2000 வார்த்தைகளுக்கு மிகக்கூடாது. ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டும் எழுதியிருத்தல் அவசியம்.இவ்விரு போட்டிகளிலும் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பெயர், வயது, வகுப்பு, பள்ளியின் பெயர், பள்ளியின் முகவரி, பெற்றோர் பெயர், வீட்டின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டிருக்க வேண்டும்.தலைமையாசிரியர் ஒப்புதல் சான்று தேவை. கட்டுரையை வரும் அக். 1ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.மேலும், மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு அதே தலைப்புகளில் தமிழ், ஆங்கில பேச்சுப்போட்டி மாவட்ட அறிவியல் மையத்தில் அக்.4இல் காலை 10 மணிக்கு நடைபெறும். நேரம் 5 நிமிடங்கள் மட்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பிரிவில் 2 மாணவர்கள் வீதம் 4 பிரிவுகளில் 8 மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

ராக்கெட் ஏவுதல்: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்களுக்கு தண்ணீர் ராக்கெட் ஏவுதல் போட்டி திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் அக். 4ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது. ஒரு கல்லூரிக்கு இருவர் வீதம் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். இவ்விரு போட்டிகளுக்கும் அக். 3 ஆம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். தமிழ் ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல் 3 பரிசுகள் வழங்கப்படும். வெற்றி பெற்றவர்கள் விவரங்கள் தனியாக தெரிவிக்கப்படும்.

கட்டுரைகளை அனுப்பவும், பேச்சு மற்றும் ராக்கெட் ஏவுதல் போட்டிக்கு பெயர் பதிவு செய்வதற்குமான முகவரி:

நிர்வாக அலுவலர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி-627 133, திருநெல்வேலிமாவட்டம். மேலும் விவரங்களை 04637 281210, 9442140183, ஆகிய தொலைத்தொடர்பு எண்கள் மூலம் அறியலாம்.
நன்றி கல்விசெய்தி

Sunday, 16 September 2018

பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நிம்மதி : உயர்கல்விக்கு 2ம் ஆண்டு மதிப்பெண் போதும்...

பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நிம்மதி : உயர்கல்விக்கு 2ம் ஆண்டு மதிப்பெண் போதும்...

பிளஸ் 2 மாணவர்கள் நிம்மதி அடையும் விதமான, புதிய அறிவிப்பை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் நேற்று வெளியிட்டார்.
''உயர் கல்வி படிப்புகளில் சேர, பிளஸ் 2 மதிப்பெண்களே போதும்; பிளஸ் 1 மார்க், கணக்கில் எடுக்கப்படாது,'' என, அவர் அறிவித்துள்ளார்.பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், முதல் முறையாக, பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலான மாணவர்கள், குறைந்த மதிப்பெண்களே பெற்றனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 என தொடர்ச்சியாக, மூன்று ஆண்டுகளுக்கு, அரசு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டி இருப்பதால், மாணவர்கள், கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

600 மதிப்பெண்கள் :

எனவே, பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்துவதை, மறுபரிசீலனை செய்யக்கோரி, அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு மனுக்கள் வந்தன. அதேபோல, 'பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கினால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.'அவர்களின் உயர் கல்வி துவங்கி, வேலைவாய்ப்பு வரை, அதன் தாக்கம் நீடிக்கும்' என்றும், முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கைகள் வந்தன.இதையடுத்து, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், சில திருத்தங்கள் செய்து, புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது, பிளஸ் 2 மாணவர்களுக்கு, நிம்மதி அளித்து உள்ளது.

 இது தொடர்பாக, சென்னை, தலைமை செயலகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: மேல்நிலை வகுப்பு மாணவர்களின்,எதிர்காலம் கருதி, பிளஸ் 2 மாணவர்கள், 1,200க்கு பதிலாக, 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுவர்; அதில், எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில், உயர் கல்விக்கு செல்ல, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்பிற்கு, பொதுத்தேர்வு நடக்கும். அதில், மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் தேர்வு எழுத, வாய்ப்பு அளிக்கப்படும்; தேர்வில் மாற்றம் இல்லை. ஆனால், பிளஸ் 1 மதிப்பெண்களுடன், பிளஸ் 2 மதிப்பெண்கள் இணைத்து வழங்கப்படாது. தனித்தனியே சான்றிதழ் வழங்கப்படும். உயர் கல்விக்கு செல்ல, பிளஸ் 2 மதிப்பெண்களே போதுமானது.

413 மையங்கள்:

பள்ளிக் கல்வித்துறை சார்பில், இந்த ஆண்டு, 'நீட்' உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, 413 மையங்களை துவக்கி உள்ளோம். அந்த மையங்களில், 'ஸ்பீடு' நிறுவனத்தின் உதவியுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4,130 ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். 'நீட்' நுழைவுத்தேர்வு பயிற்சிக்கு, தலைமை ஆசிரியர்களைக் கொண்டு, மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில், தேர்வு செய்து, பயிற்சி அளிக்கிறோம்.இந்த ஆண்டு, 'நீட்' தேர்வில் குளறுபடிகள் ஏற்படுவதை தவிர்க்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெளிமாநிலங்களுக்கு சென்று, தேர்வு எழுதும் நிலை ஏற்படாது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இன்று முதல், மாணவர்கள், 'பாலித்தீன்' பைகளை பயன்படுத்தக் கூடாது. இது தொடர்பாக, அனைத்து பள்ளிகளுக்கும், ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 10 மாணவர்களுக்கு குறைவாக படிக்கும், 1,125 பள்ளிகள் உள்ளன. அவற்றில், கூடுதல் மாணவர்களை சேர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்

Tuesday, 11 September 2018

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: நாளை தட்கலில் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: நாளை தட்கலில் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர்மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு செவ்வாய்க்கிழமைமுதல் தட்கலில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப். 24-ஆம் தேதி முதல் அக். 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள்  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசுத் தேர்வுசேவை மையங்களுக்குச் சென்று செப்.5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (செப்.11, 12) ஆகிய இரு தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களுக்கும் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், கடலூர், வேலூர், சென்னை ஆகிய மண்டல அலுவலகங்களின் தலைமையிடத்தில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். மேலும் தேர்வுக் கட்டணம் ரூ.125, கூடுதலாக சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500, ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 என மொத்தம் ரூ.675 பணமாக மட்டுமே அரசுத் தேர்வு சேவை மையத்தில் செலுத்த வேண்டும் என அரசுத்தேர்வுத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது

Sunday, 9 September 2018

Today & Tomorrow Only Apply For Running Attempt Students For 10th Candidates.

Today & Tomorrow Only Apply For Running Attempt Students For 10th Candidates.

Dear Students,

Please Note a Notification for 10th Students,
Last Chance For Apply in State Board Students

09.09.2018 & 10.09.2018

All The Best 

Thursday, 6 September 2018

Commerce Quiz

Commerce Quiz 12th Commerce

12th Commerce

12th Commerce Quiz

  
 


01.01.2026 Happy New Year