12th Std Tamil 1 Marks
12th Tamil 1 Marks
12th Tamil 1 Marks
Quiz
- ஒன்றேயெனின் எனும் இறைவாழ்த்துப் பாடல் இடம் பெற்றுள்ள காண்டம்….
- யுத்தக்காண்டம்
- பால காண்டம்
- வட மொழியில் இராமாயணத்தை இயற்றியவர்…….
- வான்மீகி முனிவர்
- கம்பர்
- கம்பர் தம் காவிய நூலுக்கு இட்டப்பெயர்….
- இராமாவதாரம்
- சிலப்பதிகாரம்
- கம்பர் பிறந்த நாடு
- சோழ நாடு
- சேர நாடு
- கம்பர் பிறந்த ஊர் ….
- திருவழுந்தூர்
- திருவாதவூர்
- கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர்……..
- கம்பர்
- பாரி
- விருத்தம் என்னும் ஒண்பாவில் புகழ் பெற்றவர் …
- கம்பர்
- பாரதியார்
- கம்பர் இயற்றிய மற்றொரு நூல்….
- சிலப்பதிகாரம்
- சரஸ்வதி அந்தாதி
- கம்பரை ஆதரித்த வள்ளல் ….
- சடையப்ப வள்ளல்
- பாண்டியன்
- கம்பர் வாழ்ந்த காலம் …
- கி.பி. 10 ம் நூற்றாண்டு
- கி.பி. 12 ம் நூற்றாண்டு
- சிற்றிலக்கியங்களின் வகைகள் …..
- 69
- 96
- குறிஞ்சி என்பது ….. வகையைச் சார்ந்தது.
- சிற்றிலக்கியம்
- ஐம்பெரும்காப்பியம்
- தமிழரசி குறவஞ்சி பாட்டுடைத் தலைவன் …….
- திருமால்
- முருகன்
- கற்றோரால் புலவரேறு என்று சிறப்பிக்கப் பெற்றவர்…..
- வரத நஞ்சையப்பிள்ளை
- திருவள்ளுவர்
- வரத நஞ்சையப்பிள்ளையின் ஊர் ….
- தோரமங்கலம்
- திருவழுந்தூர்
- உப்புச் சத்தியாகிரகத்தில் பங்குப் பெற்ற கவிஞர்……
- வெ.இராமலிங்கனார்
- பாரதிதாசன்
- நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு அளித்த விருது …
- பாரத ரத்னா
- பத்மபூசன் விருது
- நாமக்கல் கவிஞரின் ஊர் …
- வேலூர்
- மோகனூர்
- அகமும், புறமும் பற்றிய நூல் ….
- பரிப்பாடல்
- சிலப்பதிகாரம்
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ….
- பரிப்பாடல்
- அந்தாதி
- புறம், புறப்பாட்டு என வழங்கப்பெறுவது ……
- அகநானூறு
- புறநானூறு
- புறநானூற்றில் உள்ள திணைகளின் எண்ணிக்கை ….
- 12
- 11
- புறநானூற்றில் உள்ள துறைகளின் எண்ணிக்கை ….
- 56
- 65
- வெட்சி, வஞ்சி முதலிய புறத்திணைகளில் கூறப்படாத செய்திகளைக் கூறுவது ….
- பாடாண் திணை
- பொதுவியல் திணை
- முனிவர் கண்ட பொருள் இது என்று உணர்த்துவது ….
- பொதுவியல்
- பொருண்மொழிக்காஞ்சி
- தமிழிலக்கணத்தின் பிரிவுகள் ….
- 5
- 6
- பொருளிலக்கண வகை ….
- 2
- 3
- திணைகளின் உட்பிரிவு …
- துறை
- படலம்
- நெடுந்தொகை ….
- புறநானூறு
- அகநானூறு
- அகநானூற்றின் பாக்களின் அடிவரையரை ….
- 13 அடி முதல் 31 அடி வரை
- 31 அடி முதல் 51 அடி வரை
- அகநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் …
- பெருந்தேவனார்
- குலசேகரர்
- அகநானூற்றின் பகுதிகள் ….
- 3
- 5
- களிற்றியானை நிரையில் அமைந்துள்ள பாடல்கள் …
- 121 முதல் 180 வரை
- 1 முதல் 120 வரை
- மணி மிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ……
- 120
- 180
- நித்திலக்கோவையில் உள்ள பாடல்கள் …
- 120
- 100
- முதற்பொருள் என்பது ….
- நிலமும் பொழுதும்
- எண்ணும் எழுத்தும்
- எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்றது …
- நற்றிணை
- புறநானூறு
- நற்றிணைப் பாக்களின் அடிவரையறை ..
- 9 அடி முதல் 12 அடி வரை
- 13 அடி முதல் 31 அடி வரை
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ….
- குறுந்தொகை
- குண்டலக்கேசி
- குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை ..
- 402
- 403
- கபிலரை ‘ வாய்மொழிக் கபிலர்’ என்று போற்றியவர் ….
- நக்கீரர்
- கம்பர்
- கபிலரின் நெருங்கிய நண்பர்
- ஒட்டக்கூத்தர்
- பாரி
- கபிலர் பிறந்த நாடு ….
- சேர நாடு
- பாண்டிய நாடு
- கபிலர் பிறந்த ஊர் ….
- செய்யாறு
- திருவாதவூர்
- பாரியின் அவைக்களப் புலவர் ….
- மேத்தா
- கபிலர்
- ஐங்குறு நூற்று நூலைத் தொகுத்தவர் …..
- கூடலூர்கிழார்
- இளங்க்கோவடிகள்
- ஐங்குறு நூற்றில் குறிஞ்சி திணைப் பாடல்களைப் பாடியவர் …
- கபிலர்
- பேயனார்
- ஐங்குறு நூற்றில் முல்லை திணைப் பாடல்களைப் பாடியவர் …
- கபிலர்
- பேயனார்
- ஐங்குறு நூற்றில் மருதம் திணைப் பாடல்களைப் பாடியவர் …
- கம்பர்
- ஒரம்போகியார்
- ஐங்குறு நூற்றில் நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் …
- ஓரம்போகியார்
- அம்மூவனார்
- ஐங்குறு நூற்றில் பாலை திணைப் பாடல்களைப் பாடியவர் …
- கம்பர்
- ஓதலாந்தையார்
- பதினென் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று …..
- திருக்குறள்
- சீறாப்புராணம்
- குறட்பா என்பது ….
- ஈரடி வெண்பா
- குறள் வெண்பா
- முதற்பாவலர் ….
- கம்பர்
- திருவள்ளுவர்
- திருக்குறளின் மொத்த அதிகாரங்கள்
- 133
- 1330
- அறத்துப்பாலின் அதிகாரங்கள் …..
- 38
- 70
- பொருட்பாலின் அதிகாரங்கள் ….
- 38
- 70
- இன்பத்துப்பாலின் அதிகாரங்கள் ….
- 26
- 25
- திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் ….
- 9
- 11
- திருக்குறளின் பெருமையை உணர்த்துவது ….
- திருவள்ளுவ மாலை
- கம்பராமாயணம்
- “ வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே “ எனப் பாடியவர் …..
- பாரதிதாசன்
- பாரதியார்
- “ வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” எனப் பாடியவர் ….
- பாரதியார்
- பாரதிதாசன்
- திருவள்ளுவராண்டு கணிக்கப்பட்ட காலம் ….
- கி.மு. 31
- கி.பி. 31
- ஐம்பெரும் காப்பியங்களுள் தலையாயது …
- சீவக சிந்தாமணி
- சிலப்பதிகாரம்
- இரட்டைக் காப்பியம் …..
- சிலப்பதிகாரம், மணிமேகலை
- ஏலாதி, திரிகடுகம்
- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் …..
- கம்பராமாயணம்
- சிலப்பதிகாரம்
- சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை ….
- மூன்று
- நான்கு
- சிலப்பதிக்கரத்தில் உள்ள காதைகளின் எண்ணிகை …
- முப்பது
- இருபது
- சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு ….
- காதை
- படலம்
- நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் எனப் புகழ்ந்தவர் ….
- பாரதிதாசன்
- பாரதியார்
- வரி என்பது …
- இசைப் பாடல்
- இன்னிசைப் பாடல்
- கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்க்களுக்கு கூறப்படும் கணக்கீடு…
- தொண்ணூற்றாறு
- பதினாறு
- கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை ….
- ஆறு
- எட்டு
- உத்தர காண்ட்த்தை இயற்றியவர் ….
- உமறு புலவர்
- ஒட்டக் கூத்தர்
- சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் ….
- அனுமன்
- இராமன்
- சிறிய திருவடி என்று அழைக்கப்படுபவர் ….
- இராமன்
- அனுமன்
- தனயை என்ற சொல்லின் பொருள் …
- மகள்
- மகன்
- இராமன் கொடுத்ததாகச் சீதையிடம் அனுமன் காட்டியது ….
- சிலம்பு
- கணையாழி
- சீதைப்பிராட்டி தன்னை மீட்டுச்செல்ல வேண்டி விதித்த காலம் …
- ஒரு திங்கள்
- ஒரு மண்டலம்
- கம்பராமாயணத்தின் உட்பிரிவு ….
- படலம்
- காதை
- கம்பராமாயணம் எத்தகைய நூல் ….
- சிற்றிலக்கிய நூல்
- வழி நூல்
- ஆதிகவி ….
- வான் மீகி
- கம்பர்
- வீரமா முனிவர் இயற்றிய காப்பியம் …
- சீறாப் புராணம்
- தேம்பாவணி
- தேம்பாவணியில் இடம் பெற்றுள்ள காண்டங்கள் …
- ஆறு
- மூன்று
- தேம்பாவணியில் உள்ள படலங்கள் …
- 63
- 36
- தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை …
- 3615
- 3516
- கிறித்துவர்களின் கலைக் களஞ்சியம் ….
- தேம்பாவணி
- வழி நூல்
- வீரமா முனிவரின் தாய் நாடு …
- இத்தாலி
- இந்தியா
- கொண்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் ..
- அஞ்சாதவன்
- அறியாதவன்
- வீரமா முனிவர் இயற்கை எய்திய இடம் ….
- அம்பலக் காடு
- திருமறைக் காடு
- வீரமா முனிவர் தொகுத்த அகராதி …
- சதுர அகராதி
- அந்தாதி
- கொன்ஸ்டன் ஜோசப் பெஸ்கி என்னும் இயற்பெயர் உடையவர் …
- வீரமா முனிவர்
- உமறுப் புலவர்
- பாவேந்தர் பாரதிதாசன் இயற்றிய காப்பியம் ..
- பாண்டியன் பரிசு
- குயில்
- பாரதிதாசனின் இயற்பெயர் …
- சுப்புரத்தினம்
- பாரதி
- புரட்சிக் கவிஞர் …
- பாரதிதாசன்
- பாரதியார்
- சாகித்திய அகாதெமிப் பரிசுப் பெற்ற பாரதிதாசனின் நாடக நூல் …
- பிசிராந்தையார்
- பாண்டியன் பரிசு
- பாரதிதாசன் வெளியிட்ட இலக்கிய இதழ் …
- குயில்
- பாண்டியன் பரிசு
- பிரபந்தம் என்னும் வடச் சொல் உணர்த்தும் பொருள் …
- நன்கு கட்டப்பட்டது
- உட்பட்டது
- உலா என்பது ….
- சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று
- ஐம்பெரும்காப்பியம்
- பவனிவரல் என்பது எச்சொல்லுக்குறிய பொருள் ….
- உலா
- தேர்
No comments:
Post a Comment