Tuesday, 27 November 2018

நீட்' தேர்வு பதிவு: இரண்டு நாட்களே அவகாசம்

நீட்' தேர்வு பதிவு: இரண்டு நாட்களே அவகாசம்

'நீட்' தேர்வு பதிவுக்கு, இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளதால், மாணவர்கள் விண்ணப்பிக்க உதவும்படி, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ், 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், நீட் நுழைவு தேர்வு, மே, 5ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய அரசின், தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அதன்படி, நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நவ., 1ல் துவங்கியது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை சார்பில், பள்ளிகளிலேயே விண்ணப்பிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பத்துக்கு, இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளது; வரும், 30ம் தேதி பதிவு முடிகிறது. அதற்குள், நீட் தேர்வுக்கான பதிவுகளை முடிக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்றும், பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

8-ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்!

8-ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்!

8th Std - January - 2019👈 Public Examination - 👉Online Application👈

இதுவரையில் பள்ளிக்கே செல்லாதவர்கள் அல்லது 8ஆம் வகுப்பு முடிக்காதவர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை ஜனவரி மாதத்தில் 8ஆம்

வகுப்பிற்குப் பொதுத்தேர்வு வைக்கப்படுகிறது. மற்றும் ஏற்கனவே 8ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதி Fail ஆனவர்களுக்கும் Application போட வாய்ப்பளிக்கப்படுகிறது. 

👉 ONLINE Application Date: 26.11.2018 (திங்கள் ) to 5.12.2018 (புதன்) வரை

👉முதன்முதலில் Application போடுபவர்களுக்குரிய RULES: 

1. Birth Certificate Xerox (very very important) அல்லது 

👉 பள்ளியில் முன்னர் படித்த TC Xerox

2. Fees: Rs. 175

👉 ஏற்கனவே 8ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதி Fail ஆனவர்கள் 8th Std MARK LIST Original & Xerox தேவை. 

👉 Application போடப்படும் இடம்: (Boys & Girls) Centre: 

Sri Aravindar Higher Secondary School, Salai Street, Muthiyalpet, Puducherry - 605003

👉 குறிப்பு: 

ஒரு Post Coverல் Rs.42 க்கு Postal Stampஐ ஒட்டி அதில் உங்களுடைய Addressஐ எழுதி, அதனையும் Application போடும்போது எடுத்துச் செல்ல வேண்டும். 

👉முக்கிய குறிப்பு:

தற்போது தமிழ்நாடு பள்ளிகளிலுள்ள 8ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில்தான் தேர்வு எழுத முடியும். பழைய பாடத்திட்டத்தில் எழுத முடியாது. 

(இந்த வாய்ப்பு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும்.) 👉👉👉👉👉 (8th Std - Public Exam - Application )

அறிவியல் விழிப்புணர்வு தேர்வை முதன்முறையாக ஸ்மார்ட் போனில் தேர்வெழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள்

அறிவியல் விழிப்புணர்வு தேர்வை முதன்முறையாக ஸ்மார்ட் போனில் தேர்வெழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள்

முதன்முறையாக அறிவியல் விழிப்புணர்வு தேர்வை, ஸ்மார்ட் போனில், அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதினர்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், விஞ்ஞான்
பிரசார நிறுவனம், விபா நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி., ஆகியவை இணைந்து, தேசிய அறிவியல் விழிப்புணர்வு தேர்வை நடத்தி வருகின்றன. நேற்று நாடு முழுவதும் இந்த தேர்வு நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கஞ்சனுார் அரசுப்பள்ளி தேர்வு மையத்தில், அந்த பள்ளி மாணவர்கள் உட்பட மூன்று தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர்.
அதே பள்ளியை சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும், 25 மாணவர்கள் முதன் முறையாக ஸ்மார்ட் போன் மூலம் தேர்வெழுதினர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:

மாவட்டத்திலேயே கஞ்சனுார் அரசுப்பள்ளி மாணவர்கள், முதன்முறையாக ஸ்மார்ட் போன் மூலம் தேர்வெழுதி உள்ளனர். இதில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் பரிசு வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்

நூலக ஆர்வலர் விருது - 2018' அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்!

நூலக ஆர்வலர் விருது - 2018' அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்!

வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் கடந்த ஏழாண்டுகளாகச்
சிறப்பான முறையில் நூலக வளர்ச்சிக்கு உறுதுணையாக பல்வேறு செயல்பாடுகளைச்
செய்தமைக்காக நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ்-க்கு தமிழக
அரசின் பொது நூலகத் துறை சார்பில்‘நூலக ஆர்வலர் விருது - 2018’ வழங்கப்பட்டது.

           தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில்

நூலக வளர்ச்சிக்காக  சிறந்த முறையில் செயல்படும் நூலக வாசகர் வட்டத்திற்கு

‘நூலக ஆர்வலர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

          2018-ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா கடந்த நவம்பர்-14-ஆம் தேதி
சென்னை சேத்துப்பட்டிலுள்ள எம்.சி.சி. பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

         இவ்விழாவிற்கு தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை

ஏற்றார். பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் முன்னிலை வகித்தார்.

பள்ளிக்கல்வித் துறை மற்றும் பொது நூலகத் துறை இயக்குநர் இராமேஸ்வர முருகன்
முன்னிலை வகித்தார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் து.ஜெயக்குமார் வாழ்த்துரை
வழங்கினார். 

         திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் கடந்த 2011-ஆம்
ஆண்டு நூலக வாசகர் வட்டம் தொடங்கப்பட்டது. இந்த வாசகர் வட்டத்தின் தலைவராக
தேர்வு செய்யப்பட்ட கவிஞர் மு.முருகேஷ் தலைமையின் கீழ், தொடர்ந்து மாதந்தோறும்
‘சந்திப்பு’ எனும் நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்திப்பு நிகழ்வில்,

நூல் அறிமுகம், நூல் வெளியீடு, நூல் திறனாய்வு,  பல்துறை வல்லுநர்களின் உரையரங்கு
என தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ரூ.1,000/- செலுத்திய 7 நூலகப் புரவலர்கள் மட்டுமே
இந்த கிளை நூலகத்தில் இன்றைக்கு 190 நூலகப் புரவலர்கள் சேர்ந்திருக்கிறார்கள். ரூ.5,000/-
செலுத்தி, 4 பெரும் புரவலர்கள் இணைந்திருக்கிறார்கள். புதிதாக 8 ஆயிரம் நூலக உறுப்பினர்கள்
சேர்ந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன்
அவர்களின் பிறந்த நாள் விழா, தேசிய நூலக வார விழா, உலகத் தாய்மொழி நாள் விழா,
நூலகத்திலேயே சிறப்புத் தள்ளுபடியுடன் ஒரு வார காலம் புத்தகக் கண்காட்சி, பள்ளி மாணவ-
மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, பட்டுப் போட்டிகள் நடத்தி
பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.

          நூலகத்திற்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், சோலார் மின்விளக்கு,
20 பிளாஸ்டிக் நாற்காலிகள், 4 மர நாற்காலிகள், இரும்பு பீரோ ஒன்றும் நகர முக்கிய
பிரமுகர்களிடமிருந்து நன்கொடை மூலமாக வாங்கப்பட்டுள்ளன. ரூ.30,000/- மதிப்பிலான
நூல்களும் நன்கொடையாக பெறப்பட்டுள்ளன.

           மேற்கண்ட செயல்பாடுகளை ஒர்ங்கிணைத்து செயல்பட்டமைக்காக நூலக வாசகர் வட்டத்
தலைவர் கவிஞர் மு.முருகேஷ்-க்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் ‘நூலக ஆர்வலர் விருது - 2018’ விருதினை வழங்கிக் கெளரவித்தார்.

         இவ்விழாவில், திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் ரா.கோகிலவாணி, நல்நூலகர்
விருதுபெற்ற வந்தவாசி அரசுக் கிளை நூலகர் பூ.சண்முகம், திருவண்ணாமலை மாவட்ட நூலகர்

வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்.

ஒரே ராக்கெட்டில் 31 செயற்கைக்கோள் நாளை மறுநாள் அனுப்புகிறது இஸ்ரோ

ஒரே ராக்கெட்டில் 31 செயற்கைக்கோள் நாளை மறுநாள் அனுப்புகிறது இஸ்ரோ

ஒரே ராக்கெட்டில் 31 செயற்கைக்கோள்களை ஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து இஸ்ரோ நாளை மறுநாள் அனுப்புகிறது.

வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக ‘ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங்’ (ஹிஸ்சிஸ்)’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. டிஜிட்டல் இமேஜிங் சக்தியுடன், ஸ்பெக்ட்ரோஸ்கோபி தொழில்நுட்பத்தையும் இணைத்து இந்த ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள ஆப்டிக்கல் இமேஜிக் டிடெக்டர் அரே சிப்பை அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் எலக்ட்ரானிக் பிரிவும், சண்டிகரில் உள்ள செமி-கண்டக்டர் ஆய்வு மையமும் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைக்கோள் விண்ணிலிருந்து, பூமியில் உள்ள பகுதிகளின் எலக்ட்ரோமேக்னடிக் அலைக்கற்றைகளில் இருந்து தகவல்களை சேகரித்து அனுப்பும்.இந்த பெரிய செயற்கைக்கோள்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 சிறிய மற்றும் நானோ செயற்கைக்கோள்களையும் சேர்த்து பிஎஸ்எல்வி சி43 என்ற ராக்கெட்டில் இஸ்ரோ நாளை மறுநாள் காலை 9.59 மணிக்கு அனுப்புகிறது. இவற்றில் 23 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. 

டிச.4ல் ஜிசாட் செயற்கைக்கோள்
அடுத்ததாக இஸ்ரோவின் ஜிசாட்-11 என்ற 5.7 டன் எடையுள்ள வர்த்தக செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் டிசம்பர் 4ம் தேதி ஏவப்படுகிறது. இந்த செயற்கைக்கோளில் 40 கு-பாண்ட் மற்றும் கா-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. இதன் மூலம் வினாடிக்கு 14 ஜிகாபைட் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும். இதனால் இந்தியாவில் இன்டர்நெட் வேகம் அதிகரிக்கும்.

Sunday, 25 November 2018

கூகுள் அறிவியல் போட்டி; முதல் பரிசு ரூ.35 லட்சம்!

கூகுள் அறிவியல் போட்டி; முதல் பரிசு ரூ.35 லட்சம்!

மாணவர்களின் சமூக பிரச்சனைகள் சார்ந்த அறிவை விரிவுபடுத்தி, அந்த பிரச்சனைகள் குறித்து அவர்களுக்குள் எழும் கேள்விகளுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம், அவர்களையே விடை தேட வைக்கும் ஒரு முயற்சியே இந்த போட்டி.
சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், ரோபடிக்ஸ், விண்வெளி, சுகாதாரம், சமுதாயம், உணவு, பயணம், ஆற்றல் மற்றும் ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் ஆகிய பத்து பிரிவுகளில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தேடுத்து தங்களது ஆராய்ச்சியை மாணவர்கள் மேற்கொள்ளலாம். தனி நபராகவோ அல்லது இரண்டு முதல் மூன்று நபர்களைக் கொண்ட குழுவாகவோ இந்த போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். பெற்றோரது அனுமதி அவசியம்.

பரிசுகள்:

* உலகளவில் முதல் இடம் பெறும் மாணவருக்கு ‘கிராண்ட் பிரைஸ்’ ஆக 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 35 லட்சத்து 69 ஆயிரம்) அவர்களது உயர்கல்விக்கான உதவித்தொகையாகக் கூகுள் நிறுவனத்தின் சார்பாக வழங்கப்படுகிறது.

* லீகோ எஜூகேஷன் சார்பாக 15,000 அமெரிக்க டாலர்கள் பரிசாகவும், டென்மார்க்கில் உள்ள லீகோ நிறுவனத்தைச் சுற்றி பார்க்கும் வாய்ப்பு.

* நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் சார்பாக, ‘எக்ஸ்ப்ளோரர் அவார்ட்’, 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் களேபாகோஸ் தீவுகளுக்கு 15 நாட்கள் கல்வி சுற்றுலா.

* சயின்டிபிக் அமெரிக்கன் நிறுவனம் சார்பாக ‘இனோவேட்டர் அவார்ட்’ என்கிற விருது மற்றும் 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கல்வி உதவித்தொகை.

* சிறந்த தொழில் நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட மாணவருக்கு காலக்டிக் நிறுவனம் சார்பாக ‘பயனீர் அவார்ட்’ ஆக 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்.

* சிறந்த முறையில் தங்களது மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்குத் துணை நின்ற ஆசிரியருக்கு, லீகோ நிறுவனத்தின் சார்பாக ‘இன்ஸ்பயிரிங் எஜூகேட்டர் அவார்ட்’ மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை வாங்குவதற்காக 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்.

 * உலக அளவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற 20 மாணவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தைச் சுற்றி பார்க்கும் வாய்ப்பு.
* மாநில அளவில் வெற்றி பெறும் 53 மாணவர்களுக்கு ‘ஆண்ட்ராய்ட் டேப்ளெட்’ மற்றும் இதர பரிசுகள். 100 ரீஜினல் வெற்றியாளர்களுக்குப் பரிசாக ‘குரோம்புக்’ மற்றும் இதர பரிசுகள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த போட்டிக்காக கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 12
விபரங்களுக்கு: www.googlesciencefair.com

Thursday, 22 November 2018

ஜனவரியில் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் நவம்பர் 26 முதல் விண்ணப்பிக்கலாம்

ஜனவரியில் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் நவம்பர் 26 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு நவம்பர் 26-ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு 1.1.2019 அன்று பனிரெண்டரை வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் நவம்பர் 26-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் டிசம்பர்  5-ஆம் தேதி புதன்கிழமை வரை www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (Nodal Centre)  நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம்.
முதல் முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை மட்டுமே இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள், ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகல்களைக் கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வுக்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என தெரிவித்துள்ளார்.

Saturday, 17 November 2018

10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்காக செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் துணைத் தேர்வு ரத்து!

10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்காக செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் துணைத் தேர்வு ரத்து!

வரும் 2019-20 கல்வி ஆண்டு முதல் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு, அதைத்தொடர்ந்து ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டுமே நடத்த வேண்டும். 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்காக செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் துணைத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள நடைமுறையின்படி மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வில் பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்களாகவும் தேர்வு எழுதி தேர்ச்சி அடையாதவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. வரும் மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வையும், அதைத் தொடர்ந்து நடக்கும் சிறப்பு உடனடித் தேர்வையும் மாணவர்கள் எழுத விண்ணப்பிக்கலாம்.

Thursday, 8 November 2018

1 TO 8th Std - Term 2 Exam Time Table

1 TO 8th Std - Term 2 Exam Time Table ( Tentative )

17.12.2018 தமிழ்

18.12.2018 ஆங்கிலம்

19.12.2018 கணக்கு

20.12.2018 அறிவியல்

21.12.2018 சமூகவியல்

 22.12.2018 முதல் 01.01.2019 வரை விடுமுறை

 02.01.2019 பள்ளி மீண்டும் திறப்பு

Wednesday, 7 November 2018

கணிதமும், மொழியும் இணைந்த இலக்கியம் திருக்குறள்'

கணிதமும், மொழியும் இணைந்த இலக்கியம் திருக்குறள்'
ஏழாம் எண்ணுக்கும், திருக்குறளுக்கும் உள்ள வியத்தகுஉறவு மற்றும் மனிதனின் பிறந்த ஆண்டை கணக்கிட உதவும் இலக்கியமாக திருக்குறள் உள்ளதை, கணித வல்லுனர் உமாதாணு, ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:

  திருவள்ளுவர் என்ற பெயரில், ஏழு எழுத்துக்கள்; ஒவ்வொரு குறளிலும் ஏழு சீர்கள்; 1,330 குறள், 133 அதிகாரங்களின் கூட்டுத்தொகை ஏழு என, ஏழாம் எண்ணுடன் தொடர்பு உள்ளதுடன், ஏழால் வகுபடும் எண்களாகவும் உள்ளன. அதுமட்டுமின்றி, ஏழால் வகுபடக் கூடிய, 190 குறள்களின் எண்களை, 7, 14, 21. என அனைத்தையும் கூட்டினால், 1 லட்சத்து, 27 ஆயிரத்து, 15 வருகிறது.

இதுவும் ஏழால் வகுபடும் எண்ணாக உள்ளது.அதேபோல், ஜன., 1ல் ஒருவருக்கு பூர்த்திஅடைந்த வயதை, குறள் எண்ணிக்கையான, 1,330ல் இருந்து கழித்து வரும் எண்ணோடு, 686ஐ கூட்டினால், அவருடைய பிறந்த ஆண்டை அறியலாம். அதிலும், 686 என்ற எண்ணும், ஏழால் வகுபடக் கூடியதாகும்.இவ்வாறு உலகில், திருக்குறளை தவிர, வேறு எந்த இலக்கியத்திலும் கணிதத்திற்கும், மொழிக்கும் பிணைப்பு இருப்பது அரிது. இவ்வாறு உமாதாணு கூறினார்

01.01.2026 Happy New Year