Friday, 29 March 2019

தேர்வு முடிவுகள்

தேர்வு முடிவுகள், பிளஸ் 2வுக்கு, ஏப்.,19; பிளஸ் 1க்கு, மே, 8; பத்தாம் வகுப்புக்கு, ஏப்., 29ம்தேதிகளில் வெளியாகும் என, தேர்வு துறை அறிவித்துள்ளது.

Saturday, 9 March 2019

பிளஸ் 2 கணிதம், வணிகவியல், விலங்கியல் தேர்வுகள் சற்று கடினம்: சென்டம் குறைய வாய்ப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம்,வணிகவியல், விலங்கியல் தேர்வுகள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

இதனால் அந்தப் பாடங்களில் முழு மதிப்பெண் பெறும்மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.   பிளஸ் 2 பொதுத்தேர்வில் முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் வியாழக்கிழமை முதல் தொடங்கின.கணித பாடம் குறித்து சென்னையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எஸ்.கீதா,  டி.பிரியா, கே. சுகன்யா,  ஆர்.கார்த்திக் உள்ளிட்டோர் கூறியது:  கணித பாடத்தில்  ஒரு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட20 வினாக்களில் 9 கேள்விகள் சிந்தித்து எழுதும்வகையில் கேட்கப்பட்டிருந்தன. அதேபோன்று  2 மதிப்பெண் வினாவில் ஐந்து மதிப்பெண்ணுக்குரிய வினாக்கள் 2 கேட்கப்பட்டிருந்தன. அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க நேரம் போதவில்லை.  கணித பாடத்தில் முழு மதிப்பெண் பெறுவதற்காக பல்வேறு முன் தயாரிப்புகளில் ஈடுபட்டோம். ஆனால் ஒரு மதிப்பெண் கேள்விகளால் சென்டம்  பெற முடியுமா எனத் தெரியவில்லை என்றனர்.

இது குறித்து சென்னையைச் சேர்ந்த கணித ஆசிரியர்கள் மாலதி,  ராஜேஷ் ஆகியோர் கூறுகையில்,  பிளஸ் 2 கணித வினாத்தாளில் அனைத்துக் கேள்விகளும் பாடப் பகுதியில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன.  இருப்பினும் ஒரு மதிப்பெண்பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகளவு மறைமுக வினாக்கள் இடம்பெற்றிருந்தன.  வினாத்தாள்ஓரளவுக்கு கடினமாகவே இருந்தது. ஆனால் ஐந்து மதிப்பெண் பகுதியில் மாணவர்கள் நன்கு எதிர்பார்த்த வினாக்களே கேட்கப்பட்டிருந்ததால் இந்த முறை கணிதத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றனர்.

வணிகவியல் வினாத்தாள்:

கலைப்பிரிவு மாணவர்களுக்கு முக்கியப் பாடங்களில் முதல் தேர்வாக வணிகவியல் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது.  இது குறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில்,  மற்ற பாடங்களைக் காட்டிலும் வணிகவியல் பாடத்தில்தான் அதிக மதிப்பெண் பெற முடியும். ஆனால் பொதுத்தேர்வில்  இதுபோன்ற வினாத்தாளை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.  அந்தளவுக்கு பெரும்பாலான கேள்விகள் புதிதாக இருந்தன. காலாண்டு, அரையாண்டு மற்றும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் கூட கேட்கப்படாத வினாக்கள் இடம்பெற்றிருந்தன.  ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு கூட நன்கு யோசித்துபதிலளிக்க வேண்டியிருந்தது.

அதேபோல் 3 மற்றும் 2 மதிப்பெண் வினாக்களும் கடினமாக இருந்தன. 5 மதிப்பெண் வினாக்கள் சற்று எளிதாக இருந்தன. தேர்ச்சி பெறுவதில் எந்த விதப் பிரச்னையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் 100-க்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் கிடைப்பது சற்று கடினம் என்றனர். இதேபோன்று விலங்கியல் பாடத்தில் 1, 2 மதிப்பெண் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாகவும்மற்ற வினாக்கள் எளிதாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்

தமிழக காவல் துறைக்கு, 969 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு!

தமிழக காவல் துறைக்கு, 969 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.

தமிழக காவல் துறை, சிறைத் துறை மற்றும்தீயணைப்பு துறைக்கு, காலி பணியிடங்களுக்கு ஏற்ப, இரண்டாம் நிலை போலீஸ்காரர்கள் - எஸ்.ஐ.,க்கள், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த வகையில், மூன்று துறைகளுக்கும், ஆண்கள், பெண்கள், திருநங்கையர் என, இரண்டாம் நிலை போலீசாக, 8,826 பேரை தேர்வு செய்ய உள்ளதாக, மார்ச், 6ல், அக்குழுமம் அறிவித்தது.இந்நிலையில், தமிழக காவல் துறையில், ஆயுதப்படை, சிறப்பு காவல் படை மற்றும் தாலுகா பிரிவுக்கு, போலீஸ், எஸ்.ஐ.,க்கள், 969 பேர் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, நேற்று, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.

விண்ணப்பங்கள், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே பெறப்படும்.விண்ணப்பத்தாரர்கள், மார்ச், 20 முதல், ஏப்., 19 வரை, www.tnusrbonline.org என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்க வேண்டும்.எழுத்து தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் எனவும், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது.

தமிழக கல்வித்துறையில் வேலை - ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2019

தமிழக அரசின் கல்வித்துறையில் காலியாக கண்காணிப்பாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Assistant Superintendent of Approved Schools (Men‟s Wing) - 02
பணி: Assistant Superintendent of Approved Schools (Women‟s Wing) - 01
பணி: Assistant Superintendent (Vigilance Institutions) - 02

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Criminology, Forensic Science போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது Psychology, Philosophy பிரிவுகளில் Psychology -ஐ ஒரு பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள்:  160 செ.மீ உயரமும், மார்பளவு 79 செ.மீ. 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள்: உயரம் - 145 செ.மீ உயரமும், மார்பளவு 71 செ.மீ. 2 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு 2 தாள்களைக் கொண்டது. முதல் தாள் 300 மதிப்பெண்களும், இரண்டாம் தாள் 200 மதிப்பெண்களும் கொண்டது.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 21.04.2019

தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர்

விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150, பதிவுக் கட்டணம் ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். ஒன் டைம் பதிவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்யாதவர்கள் மட்டும் பதிவுக் கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, விதவை பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு மின்சாரத்துறையில் 5000 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் கேங்க்மேன் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக, தகுதியுள்ள அனைவரிடமிருந்து உடற்தகுதி தேர்விற்கும், எழுத்து தேர்விற்கும் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கேங்க்மேன் (பயிற்சி)

காலியிடங்கள்: 5000

தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். பின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை - 1-ல் (அதாவது ரூ.16,200 - 51,500) பொருத்தம் செய்யப்படும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: இதர பிரிவினர், மி.மி.வ, சி.ம, பி.வ,பி.வ(மு) ரூ.100, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 24.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tangedco.gov.in என்ற இணையத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.03.2019 முதல் 22.04.2019 வரை விண்ணப்பிக்கலாம்

01.01.2026 Happy New Year