Friday, 17 May 2019

ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி நாள்!

ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி நாள்!

சென்னை மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2019ம் ஆண்டிற்கான (ஐ.டி.ஐ) மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

சென்னை மாவட்டத்தில், கிண்டி, வடசென்னை, திருவான்மியூர், ஆர்.கே.நகர், கிண்டி(மகளிர்) ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி பெறவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்து பயிற்சி பெறவும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

மாணவர்கள் www.skilltraining.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் வரும் ஆகஸ்ட்-2019 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ம் வகுப்பு 10ம் வகுப்பு, தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 31ம் தேதி ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்

கால்நடை மருத்துவப் படிப்பு: ஜூன் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவப் படிப்பு: ஜூன் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான(BVSc & AH / BTech) மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக  சேர்க்கை குழுவின் தலைவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான(BVSc & AH / BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழக இணையதளம் (www.tanuvas.ac.in) மூலம் கடந்த மே 8  காலை 10 மணி முதல் ஜூன் 10-ம் தேதி  மாலை 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.  இதில் மே.16 வரை கால்நடை மருத்துவ (BVSc &AH) பட்டப்படிப்பிற்கு 7488 மாணவ / மாணவிகளும் BTech பட்டப்படிப்புகளுக்கு 1268 மாணவ / மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர்.  மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் (Download) செய்து, தகுந்த சான்றிதழ் நகல்களுடன் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன் 10 மாலை 5.45 மணி.விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் ஜூன் கடைசி வாரத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை இரண்டாம் வாரத்தில் நடைபெறும். அயல்நாடு வாழ் இந்தியர் (NRIs) அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) /அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினருக்கான இடங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tanuvas.ac.in) விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் (Download) செய்து, தகுந்த சான்றிதழ் நகல்களுடன் பல்கலைக்கழகத்திற்குவந்து சேர கடைசி தேதி ஜூலை 01-ம் தேதி மாலை 5.45 மணி ஆகும்''.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Friday, 10 May 2019

பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சிறப்புத் துணைத் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (மே 10) முதல் செவ்வாய்க்கிழமை (மே 14) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை சிறப்புத் துணைத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (மே 10) முதல் செவ்வாய்க்கிழமை (மே 14) மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களிலும்  இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்கள் உடனடி துணைத் தேர்வின் செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதுமானது. எழுத்துத் தேர்வை மீண்டும் எழுத தேவையில்லை. அதேபோல், செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் செய்முறை,  எழுத்துத் தேர்வு இரண்டையும் எழுத வேண்டும். செய்முறை, எழுத்துத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாதவர்கள் எழுத்துத் தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதுமானது.கட்டணம்: ஒரு பாடத்துக்கு ரூ.50 உடன் இதரக் கட்டணம் ரூ.35,  இணையதளப் பதிவுக் கட்டணம் ரூ. 50சேர்த்து  செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கான கால அட்டவணையை ww.dge.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்கூடஅனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சிறப்புத் துணைத் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (மே 10) முதல் செவ்வாய்க்கிழமை (மே 14) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை சிறப்புத் துணைத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இந்தத் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (மே 10) முதல் செவ்வாய்க்கிழமை (மே 14) மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களிலும்  இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்கள் உடனடி துணைத் தேர்வின் செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதுமானது. எழுத்துத் தேர்வை மீண்டும் எழுத தேவையில்லை.

அதேபோல், செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் செய்முறை,  எழுத்துத் தேர்வு இரண்டையும் எழுத வேண்டும். செய்முறை, எழுத்துத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாதவர்கள் எழுத்துத் தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதுமானது.கட்டணம்: ஒரு பாடத்துக்கு ரூ.50 உடன் இதரக் கட்டணம் ரூ.35,  இணையதளப் பதிவுக் கட்டணம் ரூ. 50சேர்த்து  செலுத்த வேண்டும்.

இந்தத் தேர்வுக்கான கால அட்டவணையை ww.dge.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்கூடஅனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு மே.13,14-இல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு மே.13,14-இல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் திங்கள், செவ்வாய்க்கிழமை (மே 13, 14)  சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

இதில், விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையத்துக்கு  திங்கள், செவ்வாய்க்கிழமை (மே 13, 14)  தேதிகளில் நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மறுவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்த மையங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்து www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அதேபோல், தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் மே 13, 14ஆகிய தேதிகளில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்நகலையும், தேர்வு எழுதாதவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டியையும், விண்ணப்பத்தினை பதிவு செய்யும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இதற்காக அரசுத் தேர்வுகள் சேவை மையம், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கட்டணம் ரூ. 675 செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

01.01.2026 Happy New Year