Monday, 25 December 2017

பத்தாம் வகுப்பு தேர்வில் முழு மதிப்பெண் பெற பாட வாரியாக ஆசிரியர்கள் வழங்கி ஆலோசனைகள்.

புதுச்சேரி: தினமலர் ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு தேர்வில் முழு மதிப்பெண் பெற பாட வாரியாக ஆசிரியர்கள் வழங்கி ஆலோசனைகள்.

தமிழாசிரியர் பாலபாரதி 

தமிழ் முதல் நாள் பிரிவு-1 ல் உள்ள ஒரு மதிப்பெண்களை முழுவதுமாக பெற,பாடத்தின் இறுதியில் உள்ள கருத்துகளை படிக்க வேண்டும். குறிப்பாக நுால்குறிப்பு,ஆசிரியர் குறிப்பு படிக்க வேண்டும்.

பிரிவு-2ல் செய்யுள் பகுதியில் ஏலாதி,திருக்குறள், கம்பராமாயணம், பெரிய புராணம்,தமிழ்விடு துாது, தேவாரம், கலித்தொகை,நந்திகலம்பகம் பகுதிகளை நன்றாக படிக்க வேண்டும். குறிப்பாக 3,5, 6,7, 9 இயல்களை நன்றாக படிக்க வேண்டும். உரை நடையில் 1, 5, 6,7, 8, 9, 10 வரையுள்ள இயல்களை நன்றாக படிக்க வேண்டும்.

பிரிவு-3ல் முழு மதிப்பெண் பெற சிலப்பதிகாரம், கம்பராமாயணம்,சீறாப்புராணம், நற்றிணை அல்லது புறநானாறு படிக்க வேண்டும். உரை நடையில், அம்பேத்கர்,பெரியார், காந்தியடிகள், தொண்மை தமிழகம் பகுதி தெரிந்திருந்தால் முழு மதிப்பெண்ணை பெறலாம்.

பிரிவு-4ல் 45வது கேள்வியை எதிர்கொள்ள தமிழ்விடு துாது, நற்றினை, கலித்தொகை,நந்திகலம்பகம், புறநானுாறு, நாலாயிர திவ்ய பிரபந்தம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆங்கில ஆசிரியர் ஜான்

ஆங்கில புத்தகத்தில் மொத்தம் 117முக்கியமான வார்த்தைகள் உள்ளன. இவற்றில் மிக முக்கியமானவை 91. இதில் 65 ஆங்கில வார்த்தைகள் பொருள் கூறுக கேள்வி பகுதியில் அடிக்கடி கேட்கப்படுகின்றன. இதன் நேர் பொருள்,எதிர் பொருள் இரண்டும் தெரிந்து கொள்ள வேண்டும்.

காம்பரன்சிவ் பகுதி உயிர் மூச்சு போன்றது. 10மதிப்பெண்களில் 7.5 மதிப்பெண்களை சுலபலமாக பெற்று விடலாம். கிராமர் கேள்விகளில் பாதி சரியாக எழுதினால் கூட பாதி மதிப்பெண் கிடைத்து விடும்.

கணித ஆசிரியர் ஆறுமுகம்

கணிதத்தில் நுாறு மதிப்பெண் பெற 1,2, 3, 4, 5,மற்றும் 8 பாட பிரிவுகளை நன்றாக படிக்க வேண்டும். ஒரு மதிப்பெண்களை பொறுத்தவரையில் 2, 3, 5, 7, 8 ஆகிய பாடங்களில் இருந்து இரண்டு கேள்வி இடம் பெறும். இதனால் சுலபமாக பத்து மதிப்பெண்களை எடுத்துவிட முடியும்.

இன்றைய இணைதளத்தில் கணிதம் பாடம் சம்பந்தமாக விபரங்கள் கொட்டி கிடக்கிறது. பாடசாலை, கல்விச்சோலை, கல்விக்குரல், ரூபி தெரேசா பிளாக் ஸ்பாட்டுகளில் வீடியோ விளக்கங்களுடன் கூடிய முக்கிய வினாக்கள்,புளு பிரின்ட் கிடைக்கின்றன.

செய்முறை வடிவியலில் தொடுகோடு,முக்கோணம் வரைதலில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். வரைபடங்களை பொறுத்தவரை மிதிவண்டி ஓட்டுபவர்,துதூ=20, மற்றும் வேலையாட்கள், நாட்கள் உள்ளிட்ட மூன்று கணக்குகள் எதிர்மாறுபாடு கொண்டது. மற்றவை நேர்மாறுபாடு கொண்டவை.

அறிவியல் ஆசிரியர் குலசேகரன்

ஒரு மதிப்பெண்-15, இரண்டு மதிப்பெண்-40,ஐந்து மதிப்பெண் -20 என 75மதிப்பெண்களுக்கு பதிலளிக்க வேண்டி உள்ளது. இரண்டு மதிப்பெண்களில் 10வகையான கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் 3 கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 30 கேள்விகள். இதில் 20கேள்விகளுக்கு விடை எழுதினால் போதும்.

ஐந்து மதிப்பெண்களை பொறுத்தவரை உயிரியல்-2 கேள்வி, வேதியியல்-1,இயற்பியல்-1 கேள்விகள் கேட்கப்படும்.

எனவே ஐந்து மதிப்பெண்ணை முழுவதுமாக பெற உயிரியலில்-2,3,4, 7 பாடங்களையும்,வேதியியலில்-10, 13 பாடங்களையும்,இயற்பியலில்-15, 17 பாடங்களை நன்றாக படிக்க வேண்டும்.

சமூக அறிவியல் ஆசிரியர் அமலோர்

ஐந்து மதிப்பெண் பிரிவில் முழு மதிப்பெண்களை பெற வரலாற்று பாடத்தில்1,11, 12, புவியியலில் 1,8, குடிமையியலில்- 1பாடத்தையும், பொருளியியல்-1 பாடத்தையும் கவனமாக படிக்க வேண்டும்.

தலைப்பு வினா வரலாற்று பகுதியில் முழு மதிப்பெண் பெற 1 முதல் 8 வரையுள்ள பாடங்கள் அல்லது 9 முதல் 14 வரையிலுள்ள பாடங்களில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

புவியியல் வேறுபடுத்துக பிரிவில் முழு மதிப்பெண் பெற 1, 3 மற்றும் 7 பாடங்களை முழுவதுமாக படிக்க வேண்டும். வரலாறு மேப்பில் ஆசியா மேப்பில் 24 இடங்களை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.

புவியியல் மேப்பிலும் முழு மதிப்பெண் பெற மலை தொடர், சிகரம், பீடபூமி, சமவெளி, ஆறு,வளைகுடா, பயிர், தொழிலகம், துறைமுகம்,தீவு என்ற தலைப்பில் நன்றாக பிரித்து கொண்டு படித்தால் முழு மதிப்பெண் பெறலாம்.

+1 பொதுத்தேர்வு கணிதம் முழு மதிப்பெண்

பொதுத் தேர்வு என்றதும் ஒரு சில மாணவர்கள் பதற்றம் அடைகின்றனர். திட்டமிட்டு கவனமாகப் படித்தால் எந்தப் பதற்றமுமே ஏற்படாது. +2, 10ம் வகுப்புக்குதான் பொதுத்தேர்வு என்ற நிலை மாறி இப்போது +1மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு கட்டாயமாகிவிட்டது. அவர்களுக்கும் தேர்வுக்கான டிப்ஸ் வழங்க வேண்டிய சூழல் உள்ள நிலையில் “பொதுவாகக் கணக்கு என்றாலே கடினம் என்ற ஒருவித பயத்துடன் இப்பாடத்தைப் படிப்பவர்களே அதிகம்.

ஆனால், கணக்கு எனக்கு இனிக்கும் என்ற நேர்மறையான சிந்தனையோடு அதிகமான பயிற்சிகளை மேற்கொண்டால் கணக்கு மிக எளிதாக மாறிவிடும்” என்று நம்பிக்கையை விதைக்கிறார் பட்டுக்கோட்டை அருகேயுள்ள அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதுகலைக் கணித ஆசிரியர் சி.மோகன். +1 கணிதப் பாடத்தில் சென்டம் வாங்கத் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்...

+1 தேர்வில் 3 மணிநேரத்தில் 200மதிப்பெண்களுக்குத் தேர்வு என்றிருந்ததை 2½மணி நேரத்தில் 90 மதிப்பெண்களுக்கு தேர்வு என மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அக மதிப்பீட்டில் 10 மதிப்பெண் மற்றும் எழுத்துத் தேர்வில் 90க்கு குறைந்தபட்சம் 25மதிப்பெண்கள் என ஒட்டுமொத்தம் 100க்கு 35மதிப்பெண்கள் தேர்ச்சியாக கருதப்படுகிறது.

ஒரு மதிப்பெண் வினாக்கள்

வினாத்தாளில் 1 முதல் 20 வரையிலான வினாக்கள் உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதும் வடிவில் இருக்கும். பாடப்புத்தகத்தின் கடைசியில் தொகுதி-1 (Volume-I) இல் IIIமற்றும் தொகுதி-II (Volume-II)இல் 49 என மொத்தம் 160 வினாக்களில் ஒரு பாடத்திற்கு ஒரு வினா வீதம் 10 வினாக்களும்,பாடப்புத்தகத்தின் உள்ளே இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட வினாக்கள் (Creative)ஒவ்வொரு பாடத்திற்கு ஒரு வினா வீதம் 10வினாக்கள் என 20 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

2 மதிப்பெண் வினாக்கள்

வினா எண் 21 முதல் 30 வரையில் ஒரு பாடத்திற்கு ஒரு வினா வீதம் 10 வினாக்கள் இப்பகுதியில் இடம்பெறும். வினா எண் 30க்கு கட்டாயமாகவும், மீதமுள்ள 9 வினாக்களில் எவையேனும் 6 என மொத்தம் 7வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இத்தகைய வினாக்களுக்கு இரண்டு மூன்று படிகளில் (Steps) விடையளிக்க வேண்டும். விரிவாக எழுத வேண்டியதில்லை.

3 மதிப்பெண் வினாக்கள்

வினா எண் 31 முதல் 40 வரையில் ஒரு பாடத்திற்கு ஒரு வினா வீதம் 10 வினாக்கள் இடம்பெறும். வினா எண் 40க்கு கட்டாயமாகவும், மீதமுள்ள 9 வினாக்களில் எவையேனும் 6 வினாக்கள் என மொத்தம் 7வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 4அல்லது 5 படிகளில் (Steps) விடையளிக்கும் வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

5 மதிப்பெண் வினாக்கள்

வினா எண் 41 முதல் 47 வரையில் உள்ள ஒவ்வொரு வினா எண்ணிலும் ஒரு வினா (அல்லது) மற்றொரு வினா என இரண்டிரண்டு வினாக்களாக (Either or Type) இது அல்லது அது வடிவில் இருக்கும். ஒரு வினா எண்ணில் உள்ள இரண்டு வினாக்களில் ஒரு வினாவிற்கு மட்டும் விடை என மொத்தம் 7 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

+1 தேர்விற்கான கேள்வித்தாள் வடிவமைப்பு (Blue Print) கொடுக்கப்படாததால் அரசு மாதிரி வினாத்தாள் மற்றும் பாடங்களின் தன்மை இவற்றை ஆய்வு செய்யும்போது உத்தேசமாக வினா எண் 43இல் உள்ள இரண்டு வினாக்களும் பகுமுறை வடிவியல் (Analytical Geometry) பாடத்தில் இருந்தும், வினா எண்44இல் உள்ள இரண்டு வினாக்களும் திரிகோண மிதி (Trigonometry) பாடத்தில் இருந்தும் வினா எண் 45ல் உள்ள இரண்டு வினாக்களும் வகை நுண் கணிதம் (Differential Calculus) பாடத்தில் இருந்தும் வினா எண் 46இல் உள்ள இரண்டு வினாக்களும் தொகையிடல் (Integral Calculus)பாடத்தில் இருந்தும் கேட்கப்படுகிறது.

 இந்த நான்கு பாடங்களில் இருந்து 8வினாக்கள் கேட்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு பாடத்திற்கு ஒரு வினா வீதம் நான்கிற்கு மட்டுமே விடையளிக்க முடியும். மற்ற 6பாடங்களில் இருந்து பாடத்திற்கு ஒரு வினா வீதம் 6 வினாக்களை வினா எண் 41, 42, 47ல் எந்த இரண்டு பாடங்களில் இருந்தும் ஜோடி சேர்த்து கேட்கலாம். இதிலிருந்து மூன்று வினாக்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். மேலும் 2, 3 மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினா தனியாக வருவதால் எல்லா பாடங்களையும் நன்கு படித்தால் மட்டுமே முழு மதிப்பெண் பெறமுடியும்.

அணிகள், வெக்டர் இயற்கணிதம், சார்புகள்,நிகழ்தகவு மற்றும் தொடர்முறையும் தொடரும் போன்ற சிறிய பாடங்கள் மெதுவாகக் கற்கும் திறனுடைய (Slow learners) மாணவர்களுக்கு அதிக நம்பிக்கையும், சிறந்த பலனையும் தரும். தினமும் அதிகாலையில் எழுந்து கடினமான பாடங்களையும், உடல் சோர்வடையும் நேரங்களில் எளிய பாடங்களையும் படித்தல் நன்று.

ஒவ்வொரு அலகின் (Unit) அடிப்படையே (Basic)+1 பாடத்தில் அமைந்திருப்பதால் இந்த பாடங்களை நன்கு ஆழ்ந்து படிப்பது அவசியமாகும். இங்குதான் நீங்கள் அதிக கணித சூத்திரங்களை சந்திக்க நேரிடும்.

இவை அடுத்து வரும் +2 வகுப்பு பாடத்திற்கும் அதிகமாகப் பயன்படுவதோடு மட்டுமின்றி மருத்துவத்திற்கான NEET தேர்வில் இயற்பியல் பாடத்திற்காகவும், AIEEE, JEE மற்றும் பல போட்டித் தேர்வுகளுக்கு அதிகம் பயன்படுவதால் கையடக்க நோட்டில் கணித சூத்திரங்களைக் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு திரும்பத் திரும்பப் படித்து நினைவுகூர்வது நல்ல பயனைத் தரும்.

நீங்கள் மிகக் கடினம் என்று கருதும் திரிகோணமிதி, வகை நுண்கணிதம், தொகை நுண்கணித சூத்திரங்களை சார்ட் (Chart)அட்டையில் எழுதி வீட்டில் நீங்கள் உறங்கும் படுக்கை அறை மற்றும் பள்ளியில் உங்கள் வகுப்பறையில் நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடங்களில் ஒட்டிவைத்துப் பார்க்கும்போதெல்லாம் நினைவுகூரலாம்.

வகுப்பறையில் ஆசிரியரின் கருத்துகளை நன்கு உள்வாங்கி எந்தெந்த இடங்
களில் சூத்திரங்களைக் கையாள வேண்டும் என்பதை நன்கு புரிந்துகொள்ளுங்கள். சந்தேகம் வரும்போது ஆசிரியரிடம் பயமின்றி உடனுக்குடன் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்ச்சியாக படிக்கும்போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். அது உங்கள் உடல் சோர்வைப் போக்கி மூளை சுறுசுறுப்பாக இயங்கி நினைவுத்திறன் மேம்பட வழிவகுக்கும்.பயம் கலந்த உணர்வுடன் தேர்வறைக்குள் நுழையாதீர்கள். அது உங்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.

வினாத்தாள்களில் உள்ள வினாக்களில் நீங்கள் மிகச்சிறப்பாக விடையளிக்கக்கூடிய வினாக்களை முதலில் தேர்வு செய்யுங்கள். அதிலும், நிறுவுக, எனக்காட்டுக, சரிபார்க்க (Prove, Show, Verify) போன்ற வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரலாம். மேலும் இத்தகைய வினாக்களில் விடையும் சேர்ந்தே இருப்பதால் நாம் சரியாக செய்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சி அடுத்தடுத்த வினாக்களுக்கு சிறப்பாக விடையளிக்க வழிவகுக்கும்.

கையெழுத்து அழகாக இல்லாவிட்டாலும் அடித்தல், திருத்தங்கள் இல்லாமல் இருந்தால் போதும். தேவையான இடங்களில் படம் வரையவும்.1 மதிப்பெண் வினாக்களுக்கு 20நிமிடம், 2 மதிப்பெண் வினாக்களுக்கு 25நிமிடம், 3 மதிப்பெண் வினாக்களுக்கு 35நிமிடம், 5 மதிப்பெண் வினாக்களுக்கு 50நிமிடம் என 2 மணி நேரம் 10 நிமிடத்தில் தேர்வை எழுதி முடித்து விடுங்கள். மீதம் இருக்கின்ற 20 நிமிடங்களில் எழுதியதைச் சரிபார்க்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்.திட்டமிட்டு படியுங்கள். நிச்சயம் உங்களால் முழு மதிப்பெண் பெற்று சாதிக்க முடியும்.

Source: குங்குமம் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!

பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!

பிஎஃப் கணக்கு விவரத்தை  அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள முடியும் என பிஎஃப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 12 இலக்கம் கொண்ட நிரந்தர எண் (Universal ActivationNumcer) உருவாக்கப்பட்டுள்ளது.

. இந்த எண்ணை வைத்து இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் பிஎஃப் கணக்கு விவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும். ஒரு ஊழியர் வேலைக்கு சேர்ந்து பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை இந்த எண் தான் அவருடைய பி.எஃப் கணக்கு எண்ணாக இருக்கும். அதனால், நிறுவனம் மாறினாலும் சர்வீஸ் காலம் விட்டுப் போகாது.

இதுவரை கட்டிய பிஎஃப் தொகை எவ்வளவு என அறிந்து கொள்ள 5 நிமிடம் போது அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ:

1. http://members.epfoservices.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று UAN நம்பரை ஆக்டிவேட் செய்வதற்கான லின்க்கை க்ளிக் செய்ய வேண்டும்.

2.அதன் பின் அதனை ஆக்டிவேட் செய்வதற்கான பதிவு செய்தலில் உங்கள் விவரங்களை சமர்பிக்க வேண்டும். உங்கள் நிறுவனம் அளிக்கும் 12 இலக்க எண்ணையும், உங்கள் செல்போன் நம்பரையும் மற்ற விவரங்களையும் அளித்து அதற்கான உறுதி செய்யும் கோடை அளித்தால் உங்கள் செல்போணிற்கு வரும் குறுங்செய்தியில் உள்ள OTPயை டைப் செய்து சமர்பிக்க வேண்டும்.

3.பின்னர் உங்கள் கணக்கிற்கான பாஸ்வேர்டை உருவாக்கி உங்கள் கனக்கில் லாக் இன் செய்து ''டவுன்லோடு'' என்ற பக்கத்திற்கு சென்று டவுன்லோட் பாஸ்புக் என்று இருக்கும் அதனை க்ளிக் செய்தால் இந்த மாதம் வரை உங்கள் நிறுவனம் உங்களிடம் இருந்து பிடித்த பி.எஃப் தொகை மொத்தமாக எவ்வளவு உள்ளது. அதில் உங்களது பங்கு என்ன? உங்கள் நிறுவனத்தின் பங்கு என்ன என்பது தெரிந்துவிடும்.

இதன் மூலம் இனி அந்ததந்த மாதம் சம்பளம் வந்தவுடன் உங்கள் கணக்கில் உள்ள தொகையை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

01.01.2026 Happy New Year