புதுச்சேரி: தினமலர் ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு தேர்வில் முழு மதிப்பெண் பெற பாட வாரியாக ஆசிரியர்கள் வழங்கி ஆலோசனைகள்.
தமிழாசிரியர் பாலபாரதி
தமிழ் முதல் நாள் பிரிவு-1 ல் உள்ள ஒரு மதிப்பெண்களை முழுவதுமாக பெற,பாடத்தின் இறுதியில் உள்ள கருத்துகளை படிக்க வேண்டும். குறிப்பாக நுால்குறிப்பு,ஆசிரியர் குறிப்பு படிக்க வேண்டும்.
பிரிவு-2ல் செய்யுள் பகுதியில் ஏலாதி,திருக்குறள், கம்பராமாயணம், பெரிய புராணம்,தமிழ்விடு துாது, தேவாரம், கலித்தொகை,நந்திகலம்பகம் பகுதிகளை நன்றாக படிக்க வேண்டும். குறிப்பாக 3,5, 6,7, 9 இயல்களை நன்றாக படிக்க வேண்டும். உரை நடையில் 1, 5, 6,7, 8, 9, 10 வரையுள்ள இயல்களை நன்றாக படிக்க வேண்டும்.
பிரிவு-3ல் முழு மதிப்பெண் பெற சிலப்பதிகாரம், கம்பராமாயணம்,சீறாப்புராணம், நற்றிணை அல்லது புறநானாறு படிக்க வேண்டும். உரை நடையில், அம்பேத்கர்,பெரியார், காந்தியடிகள், தொண்மை தமிழகம் பகுதி தெரிந்திருந்தால் முழு மதிப்பெண்ணை பெறலாம்.
பிரிவு-4ல் 45வது கேள்வியை எதிர்கொள்ள தமிழ்விடு துாது, நற்றினை, கலித்தொகை,நந்திகலம்பகம், புறநானுாறு, நாலாயிர திவ்ய பிரபந்தம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆங்கில ஆசிரியர் ஜான்
ஆங்கில புத்தகத்தில் மொத்தம் 117முக்கியமான வார்த்தைகள் உள்ளன. இவற்றில் மிக முக்கியமானவை 91. இதில் 65 ஆங்கில வார்த்தைகள் பொருள் கூறுக கேள்வி பகுதியில் அடிக்கடி கேட்கப்படுகின்றன. இதன் நேர் பொருள்,எதிர் பொருள் இரண்டும் தெரிந்து கொள்ள வேண்டும்.
காம்பரன்சிவ் பகுதி உயிர் மூச்சு போன்றது. 10மதிப்பெண்களில் 7.5 மதிப்பெண்களை சுலபலமாக பெற்று விடலாம். கிராமர் கேள்விகளில் பாதி சரியாக எழுதினால் கூட பாதி மதிப்பெண் கிடைத்து விடும்.
கணித ஆசிரியர் ஆறுமுகம்
கணிதத்தில் நுாறு மதிப்பெண் பெற 1,2, 3, 4, 5,மற்றும் 8 பாட பிரிவுகளை நன்றாக படிக்க வேண்டும். ஒரு மதிப்பெண்களை பொறுத்தவரையில் 2, 3, 5, 7, 8 ஆகிய பாடங்களில் இருந்து இரண்டு கேள்வி இடம் பெறும். இதனால் சுலபமாக பத்து மதிப்பெண்களை எடுத்துவிட முடியும்.
இன்றைய இணைதளத்தில் கணிதம் பாடம் சம்பந்தமாக விபரங்கள் கொட்டி கிடக்கிறது. பாடசாலை, கல்விச்சோலை, கல்விக்குரல், ரூபி தெரேசா பிளாக் ஸ்பாட்டுகளில் வீடியோ விளக்கங்களுடன் கூடிய முக்கிய வினாக்கள்,புளு பிரின்ட் கிடைக்கின்றன.
செய்முறை வடிவியலில் தொடுகோடு,முக்கோணம் வரைதலில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். வரைபடங்களை பொறுத்தவரை மிதிவண்டி ஓட்டுபவர்,துதூ=20, மற்றும் வேலையாட்கள், நாட்கள் உள்ளிட்ட மூன்று கணக்குகள் எதிர்மாறுபாடு கொண்டது. மற்றவை நேர்மாறுபாடு கொண்டவை.
அறிவியல் ஆசிரியர் குலசேகரன்
ஒரு மதிப்பெண்-15, இரண்டு மதிப்பெண்-40,ஐந்து மதிப்பெண் -20 என 75மதிப்பெண்களுக்கு பதிலளிக்க வேண்டி உள்ளது. இரண்டு மதிப்பெண்களில் 10வகையான கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் 3 கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 30 கேள்விகள். இதில் 20கேள்விகளுக்கு விடை எழுதினால் போதும்.
ஐந்து மதிப்பெண்களை பொறுத்தவரை உயிரியல்-2 கேள்வி, வேதியியல்-1,இயற்பியல்-1 கேள்விகள் கேட்கப்படும்.
எனவே ஐந்து மதிப்பெண்ணை முழுவதுமாக பெற உயிரியலில்-2,3,4, 7 பாடங்களையும்,வேதியியலில்-10, 13 பாடங்களையும்,இயற்பியலில்-15, 17 பாடங்களை நன்றாக படிக்க வேண்டும்.
சமூக அறிவியல் ஆசிரியர் அமலோர்
ஐந்து மதிப்பெண் பிரிவில் முழு மதிப்பெண்களை பெற வரலாற்று பாடத்தில்1,11, 12, புவியியலில் 1,8, குடிமையியலில்- 1பாடத்தையும், பொருளியியல்-1 பாடத்தையும் கவனமாக படிக்க வேண்டும்.
தலைப்பு வினா வரலாற்று பகுதியில் முழு மதிப்பெண் பெற 1 முதல் 8 வரையுள்ள பாடங்கள் அல்லது 9 முதல் 14 வரையிலுள்ள பாடங்களில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
புவியியல் வேறுபடுத்துக பிரிவில் முழு மதிப்பெண் பெற 1, 3 மற்றும் 7 பாடங்களை முழுவதுமாக படிக்க வேண்டும். வரலாறு மேப்பில் ஆசியா மேப்பில் 24 இடங்களை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
புவியியல் மேப்பிலும் முழு மதிப்பெண் பெற மலை தொடர், சிகரம், பீடபூமி, சமவெளி, ஆறு,வளைகுடா, பயிர், தொழிலகம், துறைமுகம்,தீவு என்ற தலைப்பில் நன்றாக பிரித்து கொண்டு படித்தால் முழு மதிப்பெண் பெறலாம்.
No comments:
Post a Comment