Saturday, 24 March 2018

2015 சென்னையின் எப்சி அணி,

2015-ம் ஆண்டு சாம்பியனான சென்னையின் எப்சி அணி, இந்த சீசனில் லீக் சுற்றில் 9 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது. அதே நேரத்தில் அறிமுக அணியான பெங்களூரு எப்.சி., லீக் சுற்றில் 18 ஆட்டங்களில் 13-ல் வெற்றிகளை குவித்து முதலிடம் பெற்றது.

சென்னை, பெங்களூரு அணிகள் ஏற்கெனவே லீக் போட்டிகளின்போது இரண்டு ஆட்டங்களில் மோதியுள்ளன. ஒன்றில் பெங்களூரு எப்.சி.யும் (3-1), மற்றொன்றில் சென்னையின் எப்.சி.யும் (2-1) வெற்றி பெற்று இருந்தன.

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று இறுதி ஆட்டம் நடைபெற்றது. இரு அணி வீரர்களும் கோப்பையை வெல்லும் நோக்கில் ஆக்ரோஷமாக விளையாடினர். ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடத்தில் பெங்களூரு அணி வீரர் சேத்ரி கோலடித்தார். இதையடுத்து அபாரமாக விளையாடிய சென்னை அணி வீரர் மெயில்சன் 17-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். இதனால் 1-1 என்ற கணக்கில் ஆட்டத்தில் சமநிலை ஏற்பட்டது.

தொடர்ந்து சென்னை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். 45-வது நிமிடத்தில் சென்னை வீரர் மெயில்சன் மேலும் ஒரு கோல் போட்டு அணியை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற வைத்தார். முதல் பாதியின்போது சென்னை 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-வது பாதியின்போது 67-வது நிமிடத்தில் சென்னை வீரர் அகஸ்டோ ஒரு கோலடித்தார். இதனால் சென்னை அணி 3-1 என முன்னிலையை அதிகப்படுத்தியது. கடைசி நிமிடத்தில் பெங்களூரு வீரர் மிகு ஒரு கோலடித்தார். இறுதியில் சென்னை 3-2 என பட்டம் வென்றது. சென்னை அணிக்கு ரூ.8 கோடியும், 2-ம் இடம் பெற்ற பெங்களூரு அணிக்கு ரூ.4 கோடியும் பரிசாகக் கிடைத்தது.

ஸ்டீபன் ஹாக்கிங

ஸ்டீபன் ஹாக்கிங

லண்டன்: உலகத்தில் உள்ள அத்தனை சோம்பேறிகளும் படிக்க வேண்டிய பாடம் ஸ்டீபன் ஹாக்கிங். எதுவுமே செய்யாமல் முடங்கிப் போகும் மனிதர்களுக்கு மத்தியில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய உந்து சக்தியாக திகழ்ந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

எதையுமே அறிவியல் பூர்வமாக மட்டுமே பார்க்கக் கூடியவர் ஹாக்கிங். நீ சீக்கிரம் செத்துப் போய் விடுவாய் என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர் ஹாக்கிங். அவருக்கு அப்போது 21 வயதுதான். மோட்டார் நியூரான் பாதிப்புக்குள்ளாக்கி சக்கர நாற்காலியில் முடங்கியது அவரது வாழ்க்கை. ஆனால் அவர் முடங்கவில்லை.

மரணத்துக்கே தண்ணி காட்டி வந்தவர். அசாத்தியமான புத்திசாலி. மரணம் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது நிச்சயம் ஒரு நாள் வரும். ஆனால் அது வருமே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை. எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று கூறியவர் ஹாக்கிங். மறு பிறவி. சொர்க்கம், நரகம்..இவையெல்லாம் நிஜமா.. நாம் இறந்த பின்னர் என்ன ஆவோம்.. எங்கு போவோம்... நமது உயிர் என்னாகும்.. ஆவி, பேய் உண்டா.. இதற்கெல்லாம் விடை தெரியாமல் அத்தனை பேருமே அலை பாய்ந்தபடிதான் உள்ளோம். ஆனால் இது எதுவுமே கிடையாது. இறப்போடு எல்லாம் முடிந்து போய் விடும் என்று அடித்துக் கூறியவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

மரணமே இறுதி 
மறு பிறவி கிடையாதுங்க

மரணம்தான் இறுதியானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம் என்பதோ கிடையாது என்றும் ஹாக்கிங் திட்டவட்டமாக கூறியவர். அதெல்லாம் ஜாலிக்காக பரப்பப்பட்ட கட்டுக்கதைகள் என்றும் ஹாக்கிங் கூறியுள்ளார். மக்களின் மரண பயத்தை போக்கவே இதுபோன்ற கதைகளை சிலர் கிளப்பி விட்டதாகவும், அதுவே வழி வழியாக மக்களின் நம்பிக்கையாக மாறிப் போய் விட்டதாகவும் கூறுகிறார் ஹாக்கிங்.

மூளை போயிருச்சா அவ்வளவுதான் 
மூளை இருக்கும் வரைதான்

இதுகுறித்து ஹாக்கிங் ஒரு முறை கூறுகையில் மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது. நான் கடந்த 49 வருடமாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. ஆனால் மரணிக்க நான் அவசரப்படவில்லை. நிறைய செய்ய வேண்டும் நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை. அதையெல்லாம் செய்ய வேண்டும்.

சொர்க்கமாவது நரகமாவது 
சொர்க்கமும் இல்லை நரகமும் இல்லை

மூளையும் ஒரு கம்ப்யூட்டர் போலத்தான். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் அது செயலிழந்து போகுமோ அதுபோலத்தான் மூளையும். மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும். அதன் பிறகு எதுவுமே இல்லை. மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது.

கிரான்ட் டிசைன் 
கட்டுக்கதைகள்

மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையானது. கட்டுக்கதை அது. மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் அவை என்றவர் ஹாக்கிங். இதுகுறித்து தனது The Grand Design என்ற நூலிலும் விரிவாகப் பேசியுள்ளார் ஹாக்கிங். என்னதான் இயல்பாக ஹாக்கிங் மரணத்தை அவரைப் போலவே நமது மனம் ஏற்றுக் கொண்டாலும் கூட இன்னும் சில காலம் இவர் வாழ்ந்திருக்கலாம் என்ற நப்பாசை ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை

நமது காலத்தில் நாம் சந்தித்த மாபெரும் ரோல் மாடல் ஹாக்கிங்.. போய்ட்டு வாங்க சார்.

நேற்று தான் அனாதையாக விடப்பட்ட அதே 3-வது பிளாட்பாரத்திற்கு ரெயில்வே அதிகாரியாக

கேரள மாநிலம் திருச்சூர் ரெயில் நிலைய 3-வது பிளாட்பாரத்தில் கடந்த 1998-ம் ஆண்டு 3 வயது சிறுமி அனாதையாக விடப்பட்டார். சிறுமி பசியால் மயங்கி கிடந்தாள். அப்போது திருச்சூர் சாலக்குடியில் உள்ள ஆசா தீப கிறிஸ்வத கன்னியாஸ்திரிகள் அங்கு வந்தனர்.

சிறுமியை பார்த்த அவர்கள் அவளை மீட்டு விசாரணை நடத்தினர். சிறுமி சரியாக கூட பேசமுடியாத நிலையில் இருந்தாள். சிறுமியை அரவணைத்த கன்னியாஸ்திரிகள் அவளுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து ஆறுதல் கூறினர். அப்போது சிறுமியின் அருகே ஒருவர் வந்தார். கன்னியாஸ்திரிகளிடம் இவள் எனது மகள் கீதா. தமிழகத்தில் இருந்து திருச்சூருக்கு வேலை தேடி வந்தேன். இங்கு தங்குவதற்கு இடம் இல்லாததால் மகளை ரெயில் நிலையத்தில் விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டேன் என்றார். சிறுமியும் தந்தை அருகே சென்றாள்.

நிலைமையை உணர்ந்த கன்னியாஸ்திரிகள் தங்குவதற்கு இடம் கிடைக்கும் வரை கீதா எங்கள் பராமரிப்பில் இருக்கட்டும் என்று கேட்டனர். இதற்கு சிறுமியின் தந்தை சம்மதித்தார். அதன்படி சிறுமியை ஆசாதீப மடத்திற்கு அழைத்துச்சென்றனர். அடுத்து நாள் தந்தை மடத்திற்கு வந்து மகளை பார்த்தார். அதன்பின்னர் இன்று வரை அவர் வரவில்லை.

இந்நிலையில் நிர்வாகம் கீதாவை நன்கு படிக்க வைக்க முடிவு எடுத்தது. சிறுமிக்கு கல்வி பயிற்றுவிக்க மேரி என்ற ஆசிரியையை நியமித்தனர். நன்றாக படித்த கீதா விளையாட்டிலும் ஆர்வம் காட்டினார். கூடை பந்து விளையாட்டிலும் ஆர்வம் காட்டினார். இதனை அறிந்த நிர்வாகம் சிறுமிக்கு கூடை பந்து பயிற்சியாளரையும் நியமித்தனர். கீதா படிப்பு, விளையாட்டு என்று இரு துறைகளிலும் தேர்ச்சி பெற்றார். கேரள மற்றும் இந்தியாவுக்காக கூடை பந்து விளையாட்டில் பதக்கங்கள் குவித்தார்.

அதன்பின்னர் கோழிக்கோட்டில் உள்ள கல்லூரியில் வரலாற்றை முதன்மை பாடமாக தேர்வு செய்த கீதா அதில் முதல்வகுப்பில் தேர்வானார். மலையாளம், ஆங்கிலம் என்று இருமொழிகளையும் நன்கு கற்றார்.

விளையாட்டு மற்றும் பட்டப்படிப்பு தகுதியுடன் ரெயில்வே தேர்வு எழுதினார். தேர்வில் வெற்றி பெற்ற கீதா கவுகாத்தியில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். நேற்று முன்தினம் மடத்திற்கு திரும்பினார். அங்குள்ளவர்கள் கீதாவை பாராட்டினர்.

கீதாவுக்கு தற்போது வயது 22 வயது. நேற்று தான் அனாதையாக விடப்பட்ட அதே 3-வது பிளாட்பாரத்திற்கு ரெயில்வே அதிகாரியாக கம்பீரமாக நடந்து வந்தார். பசியுடன் மயங்கி கிடந்த அந்த இடத்தை பார்த்ததும் கண்கலங்கிய கீதாவுக்கு பெற்றோர் நினைவு வந்தது.

அப்போது நிருபர்கள் கீதாவை சூழ்ந்து கொண்டனர். நிருபர்களிடம் கீதா கூறியதாவது:-

எனது சொந்த ஊர் தமிழ்நாடு. எனது தந்தை தாத்தாவுடன் ஏற்பட்ட தகராறில் என்னை மட்டும் அழைத்துக்கொண்டு திருச்சூர் வந்தார். 2-வது நாளில் இருந்து அவர் மாயமாகி விட்டார். எனது தாய்- தந்தை முகம் நன்கு நினைவில் உள்ளது. தமிழகத்தில் எங்கு உள்ளனர் என்று தான் தெரியவில்லை. ஆனால் நான் நிச்சயம் கண்டுபிடித்து விடுவேன்.

வரும் 22-ந்தேதி திருவண்ணாமலையை சேர்ந்த கூடைப்பந்து வீரர் ஜெயகுமார் என்பவரை திருமணம் செய்ய ஊருக்கு செல்கிறேன். என்னை வாழ வைத்து கேரள மண்ணுக்கு எனது நன்றி என்று கூறினார்

விடைத்தாளில் அடித்தல் இருந்தால் தேர்வு முடிவு நிறுத்தப்படும்: பள்ளிக்கல்வித் துறை

பொதுத்தேர்வு விடைத்தாளில் எழுதிய விடைகளை தேர்வரே அடித்துவிட்டால் தேர்வு முடிவு நிறுத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் இன்னும் சில நாள்களில் தொடங்க உள்ளன. இதனிடையே, பொதுத் தேர்வு எழுதும் அறையில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை விதிகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:

#தேர்வு அறையில் தேர்வு தொடங்குவதற்கு முன்பு, தேர்வுக்குரிய விடைத்தாளின் பக்க எண்ணிக்கையை அறிந்து அவற்றை சரிபார்த்திட வேண்டும். 

#தேர்வர்கள் தமது முகப்புச் சீட்டில் உள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்றுமொழி ஆகிய விவரங்களை சரிபார்க்க வேண்டும். 

#தங்களது மேஜை, நாற்காலிக்கு அடியில் எவ்விதமான துண்டுச் சீட்டுகளும் இல்லை என்பதை முன்பே உறுதி செய்திட வேண்டும். 

#விடைத்தாளில் எந்தவொரு பகுதியிலும் தமது தேர்வு எண்ணை கண்டிப்பாக எழுதக்கூடாது.

#தேர்வு  எழுதும்போது கணக்குகள் போட்டுப் பார்க்க விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.

#கூடுதல்  விடைத்தாள் வேண்டும் என்றால் கடைசி 2 பக்கங்கள் எழுதுவதற்கு முன்பாகவே, அறை கண்காணிப்பாளரிடம்  தெரிவிப்பதன்மூலம் காலவிரயம் தவிர்க்கப்படும். 

#தேவையில்லாமல் எழுதப்பட்ட விடைகளை கோடிட்டு அடிக்கும்  நிகழ்வுகளில், 'மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது' என்ற குறிப்புரையை பேனாவால் எழுத வேண்டும். அங்கு  தேர்வு எண்ணையோ, பெயரையோ எழுதக்கூடாது. 

#விடைத்தாளில் எழுதிய அனைத்து விடைகளையோ அல்லது சில  விடைகளையோ தேர்வரே அடித்துவிட்டால் ஒழுங்கீன செயல் எனக்கருதி தேர்வு முடிவு நிறுத்தப்பட்டு, வரும் இரு  பருவங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே தேர்வர்கள் விடைத்தாளில் அடித்தல் கூடாது. 

#தேர்வர்கள்  அனைத்து விடைத்தாள்கள் எழுதிய பிறகு மீதம் உள்ள காலிப் பக்கங்களை கோடிட வேண்டும்.

#நேரத்தை  மட்டும் காட்டக்கூடிய சாதாரண கைக் கடிகாரங்களை மட்டுமே மாணவர்கள் அணிந்து வர வேண்டும். 

#தேர்வுக்கு வராதவர்களின் இருக்கையில் சென்று அமராமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்தான் அமர்ந்து தேர்வு எழுத  வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாளில் அடித்தல் இருந்தால் தேர்வு முடிவு நிறுத்தப்படும்: பள்ளிக்கல்வித் துறை

Thursday, 8 March 2018

பள்ளிக் கல்வித் துறை

Wednesday, 7 March 2018

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக

மாணவர்களே.
கல்வி கற்க வாருங்கள்.
குறைந்த செலவில்
மனதுக்கு பிடித்த பட்டத்தை பெற்றிட
வாருங்கள் மாணவ சமுதாயமே.

சென்னையில்
உள்ள கல்வி நிறுவனம்
தங்களை அன்புடன்
வரவேற்கிறது.

கல்வி பெற வேண்டும்
என்ற எண்ணத்தில்
முனைப்புடன் செயல்படத் தொடங்கி பல வகையான பாராட்டுகளை
பெற்ற ஒரே கல்வி நிறுவனம்.

Prakash.V (9092347695)
HR Manager
HETA Institute
Higher Education Training Academy
Sharma Nagar. Chennai 39.

01.01.2026 Happy New Year