Sunday, 29 April 2018

10ம் வகுப்பு கணக்கு தேர்வு தேர்வுத்துறை விடைக்குறிப்பில் குழப்பம்: ஆசிரியர்கள் அதிர்ச்சி

10ம் வகுப்பு கணக்கு தேர்வு தேர்வுத்துறை விடைக்குறிப்பில் குழப்பம்: ஆசிரியர்கள் அதிர்ச்சி

பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வில் 2 மதிப்பெண் கேள்விக்கு நான்கு விடைகள்  இருந்தும் இரண்டு விடைகள் எழுதினால் மட்டுமே  மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி முடிந்தன. இதில் மொழிப்பாடத் தேர்வுக்கான விடைத்தாள்கள்  கடந்த வாரமே திருத்தத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் கணக்குப் பாடத் தேர்வுக்கான விடைத்தாள்கள் 24ம் தேதி திருத்த வேண்டும் என்று  தேர்வுத்துறை உத்தரவிட்டு இ ருந்தது.இதையடுத்து தமிழகத்தில் 70 மையங்களில் நேற்று பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத் தேர்வின் விடைத்தாள்கள்  திருத்தும் பணி தொடங்கியது.

திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கணக்கு தேர்வுக்கான விடைக்குறிப்பை(Key Answer)  தேர்வுத்துறை வழங்கியுள்ளது.கேள்வித்தாளில் பகுதி இரண்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மொத்தம் 20 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கேள்விக்கு 2 மதிப்பெண்கள்  வழங்க வேண்டும். இந்நிலையில் கேள்வி எண் 17ல் கேட்கப்பட்ட கேள்விக்கு(Range)விடை எப்படி இருக்க வேண்டும் என்று பாடப்புத்தகத்தில்  பின்பகுதியில் உள்ள கேள்வி பதிலில் 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது -1, +1, -1/2. +1/2 ஆகியவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,  அரசு அச்சிட்டு வழங்கியுள்ள வினா வங்கியிலும் மேற்கண்ட நான்கு விடைகளே அச்சிடப்பட்டுள்ளது.

ஆனால், விடைத்தாள் திருத்துவதற்காக  தேர்வுத்துறை கொடுத்துள்ள விடைக்குறிப்பில் -1, +1 மட்டும் எழுதி இருந்தால் மட்டுமே 2 மதிப்பெண் வழங்க  வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் 4 பதில்கள் எழுதி இருந்தால் அந்த மாணவர்களுக்கு முழு மதிப்பெண் கிடைக்குமா  கிடைக்காதா என்ற  சந்தேகம்எழுந்துள்ளது. இதனால் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே, மாணவர்களுக்கு முழு  மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று பெற்றோர்,மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தேர்வுத்துறை கூறுவது என்ன?

பத்தாம் வகுப்பு கணக்கு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ள விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வினா எண் 4: தமிழ் வழிப்பாட விடைக்கு மட்டுமே விடைக்குறிப்பின்படி ‘முயற்சிசெய்திருப்பின் உரிய மதிப்பெண்’ வழங்க வேண்டும். ஆங்கில  வழிப் பாட விடைக்கு விடைக்குறிப்பின்படி விடை எழுதியிருந்தால் மட்டுமே மதிப்பெண் வழங்க வேண்டும்.

வினா எண் 17, 28, 34, 39: விடைக்குறிப்பின்படியே மதிப்பெண் வழங்க வேண்டும்.

இணையதள வீடியோ, 'பார்கோடு'டன் பிளஸ் 1 புது பாட புத்தகம், 'பளிச்'

இணையதள வீடியோ, 'பார்கோடு'டன் பிளஸ் 1 புது பாட புத்தகம், 'பளிச்'

புதிய பாடத் திட்டத்தில், பிளஸ் 1 புத்தகம், கறுப்பு - வெள்ளையில் இருந்து, வண்ணமயமாகமாறியுள்ளது.புத்தகங்களின் வடிவம் மாற்றப்பட்டதுடன், பாடம் தொடர்பான, இணையதள வீடியோ இணைப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு, 13ஆண்டு களுக்கு பின், பாடத் திட்டத்தில்மாற்றம் செய்துள்ளது.பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் நேரடி மேற்பார்வையில் அமைக்கப்பட்ட கமிட்டியினர், பாடத் திட்டம் மற்றும் பாட புத்தக தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத் திட்டம் அறிமுகமாகிறது.

இதில், ஒன்று, ஆறு, ஒன்பது ஆகிய வகுப்புகளுக்கு, முதல் பருவத்துக்கான புத்தகம் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள், வண்ணமயமான அட்டைகள், புகைப்படங்கள், சித்திரங்கள், பார்கோடு ஆகியவற்றுடன் தயாரிக்கப்பட்டுள்ளன.பிளஸ் 1 வகுப்புக்கு மொழி பாட புத்தகங்களின் தயாரிப்பு, முழுமையாக முடிந்துள்ளன. மற்ற பாடங்களுக்கு, புத்தகம் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது அமலிலுள்ள, பழைய பாடத் திட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாட புத்தகம், சிறிய அளவில், அதிக பக்கங்களை கொண்டதாகவும், கருப்பு - வெள்ளையிலும் அச்சடிக்கப்பட்டுள்ளது. புதிய பாடப் புத்தகத்தில், பிளஸ் 1 புத்தகம், மற்ற வகுப்புகளைப் போல், 'ஏ - 4' அளவிற்கு மாற்றப்பட்டு, வண்ணமயமாக மாறியுள்ளது.

இவற்றில், ஒவ்வொரு பாடத்திலும், அதன் பார்முலாக்கள், சமன்பாடுகள் வரும் இடங்களில், அதற்கான உதாரணங்கள், படங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளன.அன்றாட வாழ்க்கையில் உள்ள சம்பவங்கள், காட்சிகளையே, உதாரணமாக்கி, படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், குறிப்பிட்ட பாட அம்சத்திற்கான, 'வீடியோ' செயல் விளக்கமும், அதற்கான இணையதள, யூ.ஆர்.எல்., இணைப்பும், புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பை பயன்படுத்தி, மாணவர்கள், 'யூ டியூப்' அல்லது இணையதள பக்கங்கள் வழியாக, தெரிந்து கொள்ள முடியும்.

சான்றிதழில் பிழை இருந்தால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை

சான்றிதழில் பிழை இருந்தால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை

'பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில், பெயர் விபரங்களில், பிழைகள் இருந்தால், தலைமை ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'என, தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, பொது தேர்வுகளை, அரசு தேர்வுத்துறை நடத்தி முடித்துள்ளது. தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன் வரை,மாணவர்களின் பெயர் விபரங்களில் தவறுகள் இருந்தால், அவற்றை திருத்த, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், 2017 பொது தேர்வு முடிந்து, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் போது, பலமாணவர்களுக்கு, பெயர், பெற்றோர் பெயர், இனிஷியலில் பிழைகள் இருந்தன.இதனால், உயர்கல்விக்கு சென்ற மாணவர்களுக்கு பிரச்னைகள் ஏற்பட்டன. பிழைகளை திருத்தி, மீண்டும் புதிய சான்றிதழ் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த ஆண்டு, இதுபோன்ற பிரச்னை வராமல் தடுக்க, மாணவர் விபரங்களில் பிழைகளை திருத்த, தேர்வு முடிந்த பிறகும், கூடுதல் அவகாசத்தை தேர்வுத் துறை வழங்கியுள்ளது. இதற்கான சுற்றறிக்கை, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது.

இதன்படி, பிழைகளை திருத்துவதற்கான மனு அளிக்க, இன்று கடைசி நாள்.'இந்த கூடுதல் அவகாசத்திற்கு பின்னரும், தேர்வு முடிவுகள் வந்ததும், மாணவர்களுக்கு வழங்கும் சான்றிதழில் பிழைகள் இருப்பதாக, தேர்வுத் துறைக்கு புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு அபராதம் விதிக்கப்படும். 'மேலும், துறை ரீதியாக, தலைமை ஆசிரியர் மீது, ஒழுங்கு நடவடிக்கையும்எடுக்கப்படும்' என, தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.

8-ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறை : பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி

8-ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறை : பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி

8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 
வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு, 6ம் வகுப்பு, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இவற்றில் பிளஸ் 1 தவிர மற்ற வகுப்புகளுக்கு முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டவாரியாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு அன்றைய தினமே பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இப்புதிய முயற்சியை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை புதிய பாடத்திட்டங்களை வடிவமைத்தக்குழுவே தயாரித்து வழங்கியுள்ளது. அதன்படி ஆன்லைன் தேர்வுமுறைக்கு ஏற்ப புதிய பாடப்புத்தகங்களில் கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளன. 

இதையடுத்து வரும் கல்வி ஆண்டில் முதல்கட்டமாக 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கேற்ப தமிழக அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் முழுமையாக தொடங்கிய பின்னர் தொடக்கப்பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் தேர்வுமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது

பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது

பிளஸ் 1 பொது தேர்வில், மொழி பாடத் தேர்வை குறைக்கும்திட்டம், வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக்கான தேர்வை யும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது.
முயற்சி

தமிழக பள்ளிக்கல்வித் துறையில், கல்வித் தரத்தை உயர்த்தவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, கல்வி அமைப்பில் மாற்றம் செய்யவும், பள்ளிக்கல்வி அமைச்சர்செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.இதன்படி, 13 ஆண்டு கால பழைய பாடத் திட்டம், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், தேர்வுத் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொது தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.மொபைல் போனில் தேர்வு முடிவுகள்,எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பும் திட்டம், 2017ல் அமலானது.இந்நிலையில், மாணவர்களுக்கான தேர்வு சுமையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளில், தமிழ் அல்லது விருப்ப மொழிப் பாடம் மற்றும் ஆங்கில பாடங்களில், தலா இரண்டு தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதை, ஒவ்வொரு மொழிப் பாடத்துக்கும், ஒரு தாளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுமை குறையும்

இந்த முடிவால், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, தற்போது நடத்தப்படும் எட்டு தேர்வுகள், ஆறு தேர்வுகளாக குறையும். இதனால், மாணவர்களுக்கும், தேர்வுத் துறைக்கும் சுமை குறையும் என, கல்வியாளர்கள் தரப்பில், பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதன்படி, வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு மட்டும், மொழி பாட தேர்வின் எண்ணிக்கையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததும், விரைவில் அரசாணையாக, மொழிப் பாடத் தாள் குறைப்புக்கான அறிவிப்பு, வெளியாக உள்ளது.அதேபோல், மொழி பாடங்கள் மட்டுமின்றி, முக்கிய பாடங்களின் தேர்வு எண்ணிக்கையை குறைக்கவும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.'முக்கிய பாடங்களை குறைக்க, கல்வியாளர்கள் தரப்பில், முரண்பாடான கருத்துகள் உள்ளதால், விரிவான ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.

குறுஞ்செய்தி மூலம் 2 நிமிடங்களில் தேர்வு முடிவுகள்!!!

குறுஞ்செய்தி மூலம் 2 நிமிடங்களில் தேர்வு முடிவுகள்!!!

ஏற்கெனவே அறிவித்த தேதிப்படி தேர்வு முடிவுகள் வெளியாகும்; குறுஞ்செய்தி மூலம் இரண்டு நிமிடங்களில் தேர்வு முடிவுகள் கிடைக்கும் வகையில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா அரங்கில் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் பொறியியல் கல்லூரியில் சேரும்மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப முறை, கல்லூரியைத் தேர்வு செய்யும் முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து செங்கோட்டையன் பேசியதாவது:நமது நாட்டின் உயர்கல்வி இலக்கு என்பது 23 சதவீதம். ஆனால், தமிழகத்தின் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 44.3 சதவீதம் ஆகும். தமிழகத்தில் 539 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன. இதனால் மாணவர்கள் எளிதாக உயர்கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கிறது.

முதல் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரையில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் 2 ஆண்டுகளில் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப்பட்டு இணையதளம் மூலம் பாடம் கற்பிக்கப்படும்.இதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில்ரூ.463 கோடி மதிப்பில் இணையதள வசதி ஏற்படுத்தி நவீனப்படுத்தப்படும்.தற்போது முதியவர்கள் பலர் ஆதரவற்றவர்களாக விடப்படுகின்றனர்.

இது குறித்து இளையதலைமுறையினருக்கு போதிய அறிவுரை வழங்கப்படுவது இல்லை. எனவே, பெற்றோரைப் பாதுகாப்பது, பராமரிப்பது குறித்து ஒன்றாம் வகுப்பு முதல் போதிக்கப்படும் என்றார்.பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாகத் தாமதம் ஆகாது.ஏற்கெனவே அறிவித்த தேதிப்படி ( மே 16-இல் பிளஸ் 2; மே23-இல் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்) முடிவுகள் வெளியாகும். குறுஞ்செய்தி மூலம் இரண்டு நிமிடத்தில் தேர்வு முடிவுகள் கிடைக்கும் வகையில் வெளியிடப்படும் என்றார்.

Sunday, 8 April 2018

சென்னை சூப்பர் கிங்க்ஸ்

நேற்று நடந்த 11 வது ஐபிஎல் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மட்டும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் இரு அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 165 ரன்களை இலக்காக வைத்தது. இரண்டாவது களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ஆட்டத்தின் தொடக்கத்தில் எதிரணியின் பந்தை சமாளிக்க முடியாமல் திணறியது. இந்த நிலையில் விக்கெட்டுகளை அதுத்தடுத்து இழந்தனர்.

பின்னர் களமிறங்கிய டோனி அணியை காப்பாற்றி விடுவார் என அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவரும் சொப்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். அனைவருமே சென்னை சூப்பர் கிங்க்ஸ் தோற்று விடும் என்று எண்ணினர். பின்னர் 16 ஓவர் முடிவில் 24 பந்துக்கு 51 ரன்கள் வேண்டும் என இருந்த நிலையில் ட்வாய்னே பிராவோ தனது அதிரடியான ஆட்டத்தை தொடங்கினர்.  தொடர்ந்து சிக்ஸ் மட்டும் நான்கு ரன்களாக அடித்து விளாசினார்.

இவர்தான் அணியின் தோல்வியை வெற்றியாக மாற்றியவர். 19 வது ஓவர் முடிவில் ட்வய்னே பிராவோ ஆட்டம் இழக்க, 6 பந்துக்கு 7 ரன்கள் வேண்டும் என சூழ்நிலை உருவானது மேலும் கடைசி விக்கெட் மட்டுமே இருந்தது. காலில் அடிபட்டு கடைசியாக களமிறங்கிய கேடர் ஜாதவ் தொடர்ந்து மூன்று பந்துகளை இழக்க மீதி மூன்று பந்துக்கு ஏழு ரன்கள் இருந்த நிலையில் கேடர் ஜாதவ் சிக்ஸ் மற்றும் நான்கு ரன்கள் அடித்து ஆட்டத்தை வெற்றிபெற செய்தார். இதனால் டோனி இன்றைய வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் என பெருமிதம் அடைந்தார்.

01.01.2026 Happy New Year