நேற்று நடந்த 11 வது ஐபிஎல் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மட்டும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் இரு அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 165 ரன்களை இலக்காக வைத்தது. இரண்டாவது களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ஆட்டத்தின் தொடக்கத்தில் எதிரணியின் பந்தை சமாளிக்க முடியாமல் திணறியது. இந்த நிலையில் விக்கெட்டுகளை அதுத்தடுத்து இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய டோனி அணியை காப்பாற்றி விடுவார் என அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவரும் சொப்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். அனைவருமே சென்னை சூப்பர் கிங்க்ஸ் தோற்று விடும் என்று எண்ணினர். பின்னர் 16 ஓவர் முடிவில் 24 பந்துக்கு 51 ரன்கள் வேண்டும் என இருந்த நிலையில் ட்வாய்னே பிராவோ தனது அதிரடியான ஆட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து சிக்ஸ் மட்டும் நான்கு ரன்களாக அடித்து விளாசினார்.
இவர்தான் அணியின் தோல்வியை வெற்றியாக மாற்றியவர். 19 வது ஓவர் முடிவில் ட்வய்னே பிராவோ ஆட்டம் இழக்க, 6 பந்துக்கு 7 ரன்கள் வேண்டும் என சூழ்நிலை உருவானது மேலும் கடைசி விக்கெட் மட்டுமே இருந்தது. காலில் அடிபட்டு கடைசியாக களமிறங்கிய கேடர் ஜாதவ் தொடர்ந்து மூன்று பந்துகளை இழக்க மீதி மூன்று பந்துக்கு ஏழு ரன்கள் இருந்த நிலையில் கேடர் ஜாதவ் சிக்ஸ் மற்றும் நான்கு ரன்கள் அடித்து ஆட்டத்தை வெற்றிபெற செய்தார். இதனால் டோனி இன்றைய வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் என பெருமிதம் அடைந்தார்.
No comments:
Post a Comment