Monday, 28 May 2018

சட்டப் படிப்பு

சட்டப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள்: துணைவேந்தர் அறிவிப்பு

நிகழ் கல்வியாண்டுக்கான (2018-2019)சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகங்கள் வரும் திங்கள்கிழமை (மே 28) முதல் தொடங்கும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.சூரியநாராயண சாஸ்திரி தெரிவித்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பல்கலைக்கழக அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் டி.சூரியநாராயண சாஸ்திரி கூறியதாவது:-

சீர்மிகு சட்டப் பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான (ஹானர்ஸ்) விண்ணப்பங்கள் வரும் திங்கள்கிழமை (மே 28) முதல் வழங்கப்படும். அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 1 தேதி முதல் வழங்கப்படும். 3 ஆண்டு ஹானர்ஸ் மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 27-ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ளது.மேலும், தொலைதூரக்கல்வி வாயிலாக சட்டப் படிப்புகளைத் தொடங்குவதற்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதி கிடைத்த பின் அது தொடங்கப்படும். மேலும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (என்ஆர்ஐ) இடங்கள் அரசு உத்தரவுப்படி மட்டுமே நிரப்பப்படும்.

எத்தனை இடங்கள்....

தமிழகத்தில் உள்ள 10 அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு 1411 இடங்களும், 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு 1541 இடங்களும் உள்ளன. இதுதவிர சீர்மிகு சட்டப்பல்கலைக் கழகத்தில் 624 இடங்களும் உள்ளன.விண்ணப்பிக்கும் முறை...சட்டப்படிப்புகளுக்கு ஆன்-லைன் வழியாகவும், விண்ணப்பங்களை நேரடியாகவும் பெற்று விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் நேரடியாக பெறலாம்.ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் (www.tndalu.ac.in) என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tuesday, 22 May 2018

கால்நடை மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பங்கள்வரவேற்பு

கால்நடை மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பங்கள்வரவேற்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் பேச விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இன்று முதல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஆனால், கால்நடை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே நடைபெற உள்ளது. மருத்துவப் படிப்புகளில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பது உண்டு.பிற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், நிகழாண்டு கால்நடை மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆர்வம் காட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லூரிகள்:

1. சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி, சென்னை - 600 007
2. நாமக்கல் - கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 637 002
3. கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,திருநெல்வேலி - 627 358
4. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு, தஞ்சாவூர் - 614 625
5. உணவு மற்றும் பால் தொழில்நுட்ப கல்லூரி, கொடுவல்லி, சென்னை - 600 052
6. கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி, ஓசூர் - 635110

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, உணவுத்தொழில்நுட்ப பட்டப் படிப்பு, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கென மொத்தம் 360 இடங்கள் உள்ளன.

துறைவாரியான சேர்க்கைக்கான இடங்கள்:
1. BVSc & AH 5½ Years (4½ Years +1 Year Internship - as per MSVE Regulation 2016) - 306
2. BTech (Food Technology) 4 years  - 40
3. BTech (Poultry Technology) 4 years  - 40
4. Technology) 4 years  - 20

மேற்கண்ட படிப்புகளில் சேர இன்று திங்கள்கிழமை (மே 21) முதல் தொடங்கி அடுத்த மாதம் (ஜூன் 6) தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தலாம்.விண்ணப்பம் சமர்ப்பித்து கட்டணம் செலுத்திய பின், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தகுந்த சான்றிதழ் நகல்களை சேர்க்கைக்குழு தலைவரின் அஞ்சல் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞசல் முகவரி:
 "The Chairman, Admission Committee (UG),Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram Milk Colony, Chennai-600 051"

மேலும் முழுமையான விவரங்களை http://www2.tanuvas.ac.in/UGAdmission/Instructions/Prospectus.pdf என்ற லிங்கில் சென்று படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Sunday, 20 May 2018

பிறந்ததும் இறந்த குழந்தை..! புதைக்கும் போது உயிர் வந்த தெய்வசெயல்..!! நெல்லையில் பரபரப்பு..!!!

பிறந்ததும் இறந்த குழந்தை..! புதைக்கும் போது உயிர் வந்த தெய்வசெயல்..!! நெல்லையில் பரபரப்பு..!!!

மருத்துவமனையில் இறந்ததாக கூறிய பிறந்த குழந்தைக்கு சுடுகாட்டில் உயிர் வந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் இல்லத்து பிள்ளை தெருவை சேர்ந்த வேலம்மாள் (வயது 25). இவர், பிரசவத்திற்காக சுரண்டை கமலா நர்சிங் ஹோம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்த்துள்ளார். நேற்று காலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் சில மணி நேரத்திலேயே மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டது. உடனே கொண்டு அடக்கம் செய்யுங்கள் எனக் கூறி அனுப்பியுள்ளார். இதனால் உடன் இருந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறந்த சில நிமிடங்களில் தாய் கண் விழிக்காமல் இருக்கும்போதே குழந்தை இறந்துவிட்டதை நினைத்து உறவினர்கள் கதறி அழுதபடி இறுதி சடங்கு செய்ய முயன்றனர்.
அவர்களது வழக்கப்படி காது குத்திதான் அடக்கம் செய்ய வேண்டும் என்பதால் மயானத்தில் குழந்தையை வைத்துவிட்டு நகை கடையில் உள்ள ஒருவரை அழைத்து வந்து குழந்தைக்கு காது குத்தி உள்ளனர். காது குத்தும்போது குழந்தை கதறி அழுவதைக் கண்டு திகைத்த உறவினர்கள் உடனடியாக தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

சிறிதும் தாமதிக்காமல் விரைந்த 108 ஆம்புலன்சில் குழந்தை மயானத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளை ஹை கிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முறையாக பரிசோதனை செய்யாமல் குழந்தை இறந்துவிட்டது என கூறிய மருத்துவமனை மருத்துவர்களை உறவினர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். அதே நேரத்தில் குறைவான நேரத்தில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பாளை மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய 108 வாகன ஓட்டுநரை உறவினர்கள் மனதார பாராட்டி உள்ளனர்.

Saturday, 19 May 2018

அப்துல் கலாம் கனவு கண்டார்.

இந்தியாவை வரும் 2020ம் ஆண்டுக்குள் வலலரசாக்க வேண்டும்  என்று  அப்துல் கலாம் கனவு கண்டார். அதை நனவாக்கும் நோக்கத்தோடு இந்தியா 2020 என்ற நூலை அப்துல் கலாம் எழுதியுள்ளார். அதில், வல்லரசாகவும், முன்னேறிய நாடாகவும் இந்தியா மாற செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டுள்ளார்.  ஒரு நாடு சிறந்த, வலிமையான நாடாக மாற வேண்டுமென்றால், கீழ்க்கண்ட துறைகளில் தன்னிறைவு காண வேண்டும் என வரையறுக்கிறார்.

1. வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல்
2. மருத்துவம் மற்றும் ஆரோக்கியம்
3. தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம்
4. அடிப்படை கட்டமைப்பு, தடையற்ற மின்சாரம், சீரான சாலை போக்குவரத்து.
5. மிகமுக்கிய உயர் தொழில் நுட்பத்தில் தன்னிறைவு.
அப்துல் கலாம் டுவிட்டர் சமூக இணைய தளத்தில் தனது நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் மற்றும் தனது கருத்துக்களை டுவிட் செய்வது வழக்கம். அவரது டுவிட்களை 14 லட்சம் பேர் பாலோ செய்கின்றனர். ஷில்லாங்கில் நடைபெறும் ஐ.ஐ.எம். விழாவில் கலந்து கொள்ள புறப்படுவதாக அவர் நேற்று காலை கடைசியாக டுவிட் செய்திருந்தார்.

மதுரையை கவர்ந்த கலாம்

ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் அப்துல் கலாம் மதுரைக்கு அடிக்கடி வந்து பள்ளி, கல்லூரி மற்றும் விழாக்களில் பங்கேற்றார். கடைசியாக, கடந்த 18ம் தேதி மதுரைக்கு வந்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க விழாவில் பேசினார். அப்போது ‘இயற்கை விவசாய முறை நன்கு வளர வேண்டும். இயற்கை உணவுகளை உட்கொள்ள வேண்டும். கிராமங்களில் இயற்கை முறையில் விளைவித்த காய்கறி அங்காடிகள் திறக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.

குடும்பத்தின் கடைக்குட்டி

அப்துல் கலாம் தனது பெற்றோருக்கு கடைசி பிள்ளையாக பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 4 பேர். உடன் பிறந்த இரண்டு அண்ணன்கள், ஒரு அக்காள் ஏற்கனவே இறந்துவிட்டனர். மூத்த அண்ணன் முகமது முத்துமீரான் மரைக்காயர் (92) உள்ளார். ஐந்தாவதாக பிறந்த அப்துல் கலாம் தற்போது இறந்துவிட்டார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும்?

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும்?

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜரோ “சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக்கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்” என்கிறார்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, “இது தான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு முன் தேதியிட்டு செக் கொடுத்துவிடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்”. என்கிறார்.

அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.

ஆனால் பேட்ரெவ்ஸ்கி, “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை…” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.

ஆண்டுகள் உருண்டன.

பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு.

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)

பேட்ரெவ்ஸ்கி கேட்டுக்கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.

ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறார்.

“நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது. நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்.

பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக்கொள்கிறார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

இத்தோடு முடியவில்லை ஹூவரின் நன்றிக்கடன். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் (1946) போலந்துக்கு உதவுவதற்கு என்றே ஒரு தனி கமிஷன் ஹூவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் சார்பாக போலந்துக்கு நேரில் சென்ற ஹெர்பர்ட் ஹூவர், அந்நாட்டிற்கு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தேவையான உணவுத் திட்டங்களை வகுத்துக்கொடுத்துவிட்டு அவற்றிற்கான அமெரிக்க அரசின் உதவிகளையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். இதன் காரணமாக போலந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹெர்பெர்ட் ஹூவரை புகழ்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவருக்கு போலந்து நாட்டு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. போலந்து மக்கள் மனதில் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வந்தார் ஹெர்பெர்ட் ஹூவர்.

அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் UNICEF & CARE என்று இரண்டு புதிய சர்வதேச தொண்டு அமைப்புக்களை ஹூவர் ஏற்படுத்தினார். அதன் மூலம் உலக முழுதும் பல லட்சம் மக்கள் இன்றும் பசியாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?

இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

ஏனெனில்…… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை! பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே…..
காலம் குறித்து வைத்துகொண்டது....

(உண்மை சம்பவம்.)

தினம் ரூபாய் 86400/-........

தினம் ரூபாய் 86400/-........
 
ஒரு சின்ன கற்பனை.
விருப்பமுடன் படியுங்கள்

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.

பரிசு என்னவென்றால் -ஒவ்வொரு நாள் காலையிலும்
உங்கள் வங்கிக் கணக்கில் 86,400. ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில நிபந்தனைகள் உண்டு.

அவை -

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத
பணம் " உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு கணக்கிற்கு மாற்றமுடியாது.

3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய்வரவு வைக்கப்படும்

5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6) வங்கி -
"முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவு தான்.
வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?

உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள்
இல்லையா?

உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக
மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -அப்படித்தானே?

முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை-
நிதர்சனமான உண்மை😀😀

ஆம் நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கி க்கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.

அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின்பெயர் -
#காலம்.

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்போது வாழ்க்கையின்
அதியுன்னத பரிசாக 86400
வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.

இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.

அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள்தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான்.

ஒவ்வொரு நாள் காலையிலும்
புத்தம் புதிதாக நம்கணக்கில் 86400 வினாடிகள்.

எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும்வங்கி உங்கள் கணக்கை
முடக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில்நீங்கள் என்ன செய்வீர்கள்?

உண்மையில் 86400
வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு
வாய்ந்தது அல்லவா?

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா?
வாழ்க்கை என்பது ஒருமுறை தான் அதை மகிழ்ச்சியுடனும் , உறவுகளுடனும் , மனிதனேயத்துடனும் இறைவனுக்கு   ஏற்ற வாழ்க்கையாக வாழ்வோம் !
🕛🕐🕑🕒🕓🕔🕕🕖🕗🕘🕙🕚
வாழ்க்கையை வாழவே பணம் தேவை , பணத்தை சேர்க்க வாழ்வு அல்ல !
காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.🏃
சந்தோஷமாகஇருங்கள் -
மீண்டும் பிறப்போம் என்பது நிச்சயம் இல்லை , மீண்டும் அம்மா,அப்பா, சகோதரர்கள் ,சகோதரிகள் ,நண்பர்கள் ,உறவுகள் வருவது இல்லை !
சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - 🌈

வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்....

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள் ..... ....

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள் .....  ....             

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.

அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.

அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.

சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.

இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை.

தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல.

அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு.

ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.

ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.

முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட,

என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;

நாளைய பொழுதும் நிச்சயமில்லை;

இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.

ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம்.

ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.

அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது....

மா.பொற்செல்வி பட்டிமன்ற பேச்சாளர்

01.01.2026 Happy New Year