Thursday, 26 July 2018
வருக வருக அப்துல் கலாம் தலைமுறை மாணவர்களே
Wednesday, 11 July 2018
+2 Original mark Sheet issue
DGE: +2 Original mark Sheet issue - Press Release
+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் 16.07.2018 அன்று காலை 10 மணிக்கு அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்!
காற்றழுத்த தாழ்வு பகுதி - வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
காற்றழுத்த தாழ்வு பகுதி - வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
வடமேற்கு வங்க கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 13ம் தேதி வலுப்பெறும் என்பதால் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 3 வாரங்களுக்குப் பின் மீண்டும் வலுவடைந்துள்ளது. கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கிய பருவமழையால், ஜூன் மாதம் முதல் 2 வாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள பகுதிகளில் அதிக மழை கிடைத்தது. ஜூன் 1 முதல் நேற்று வரை தமிழகத்தில் 64 மி.மீ மழை இயல்பாக பெய்ய வேண்டும். ஆனால் இயல்பைவிட 28 சதவீதம் அதிகரித்து, 81.9 மி.மீ நேற்று வரை பதிவாகியுள்ளது.கடந்த 3 வாரங்களாக பருவமழை வலுவிழந்து காணப்பட்டது.
தற்போது மீண்டும் பருவக்காற்று வலுவடைவதால் மழை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. அதன்படி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், கோவை பொள்ளாச்சி, தேனி, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஆகிய இடங்களில் கடந்த 3 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சம் கோவை சின்னக்கல்லாரில் 110 மி.மீ, வால்பாறையில் 90 மி.மீ, வால்பாறை தாலுகா அலுவலகம் பகுதியில் 80 மி.மீ, பொள்ளாச்சியில் 60 மி.மீ, நீலகிரி தேவலாவில் 40 மி.மீ, தேனி பெரியார் பகுதியில் 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து நேற்றும் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில், வடமேற்கு வங்க கடலில் ஆந்திரா கடல் பகுதி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது வரும் 13ம் தேதி வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் திடீர் மழைசென்னையில் நேற்று மாலை 6.15 மணி அளவில் திடீரென மழை பெய்தது.
தேனாம்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், திருவான்மியூர், மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பல இடங்களில் மாலை லேசான மழை பெய்தது. பின்னர் இரவு 8 மணி அளவில், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாசாலை, அண்ணாநகர், ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், கிண்டி உள்ளிட்ட பல இடங்களில் விட்டு, விட்டு சில நிமிடங்கள் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. வெப்பச் சலனத்தால் நேற்று மழை பெய்துள்ளது
காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கான தேர்வு
காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கான தேர்வுக்கு 11.07.2018 முதல் Online மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் அறிவுப்பு.
ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா..? பதறாதீர்..!மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ..!
ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா..? பதறாதீர்..!மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ..!
ஒன்றிரண்டு கள்ளநோட்டு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது வந்து விட் டால், என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப்போட்டு விட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள்.
இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்ய வேண் டும்..? யாரை அணுகவேண்டும்..?
இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா..?
இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன..?
ஏ.டி.எம். ஃபிட் கரன்சி,,!
ஏ.டிஏம். வாயிலாக கள்ளநோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி. எம்.-ல் ரூபாய்த்தாள்களை லோடு செய்வதற்குமுன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM Fit Currency) மாற்றப்படுகின்றன.
இந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுவிடும். ஆர்.பி. ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின் பற்றியாக வேண்டும்.
அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒருமுறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது. கள்ள நோட்டுகள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தா ல் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.
எப்படி வருகிறது..?
எந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடு செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படுகிறது.
Cash In Tranceit போன்ற பெரும்பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்துவருகின்றன.
இவர்களின் பணிவங்கியிலிருந்து மொத்தமாகப் பணத்தைப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண்மைத்தன்மையையும், தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களி டம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள்.
யாரை அணுகுவது..?
வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ளநோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப்படுத்துவதற்கு முன்னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி. கேமராவில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது அவசியம்.
ஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும்போது உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
பின்னர் ஏ.டி.எம்.லிங்டுபேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி. எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப்பார்கள்.
அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
வங்கி நடைமுறைகள்..!
ஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடைமுறை என்ன என்று பார்ப்போம்.
ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்) சந்தேகத்திற்குரிய ரூபாய்த்தாளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த ரூபாய் கள்ளநோட்டுதானா என பரிசோதிப்பார்கள். அது கள்ளநோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். கள்ள நோட்டு தான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள்.
உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த்தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந் து எடுக்கப்பட்டதுதான் என விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூலமும், உங்களின் பின்புலன்களை விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள்.
இந் த விசாரணையில் கள்ளநோட்டை கொண்டு வந்தவர்மீது சந்தேகம் வந்தால் அவர்மீது வங்கியானது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்காது.
எஃப்.ஐ.ஆர். ஃபைல்..!
பொதுவாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை எடுத்து அப்பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த்தாள்கள் கள்ளநோட்டுகளாக இருக்கும் பட்சத் தில் மட்டுமே அவர்களின்மீது வங்கி உடனடியாக காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல் செய்யும்.
அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள நோட்டுகளாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக்கொண்டு விசாரிக்கும்.
தனது ஏ.டி. எம்-ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக்கிறது என்று நிரூபணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும்.
வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதியில் காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும்.
ஆர்.பி.ஐ.-ன் உதவி..!
வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ளநோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும்போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்களுக்கு சந்தேகம் நீடித்தால் அந்த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு (Currency chest branches) சென் று உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
அதற்கு அடுத்தும் உங்களின் சந்தேகம் நீடித்தால் ஆர்.பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண்மையானதுதானா என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளலாம்.
இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு,
www.rbi.org.in
www.paisabolthahai.rbi.org.in
என்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்களை நாடலாம்.”
இனியாவது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருப்பது தெரிந்தால், பதற்றப்படாமல் முறைப்படி வங்கியை அணுகி, நஷ்டப்படுவதைத் தவிருங்கள்
அரசு விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயிற்சி பெற வாய்ப்பு
அரசு விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயிற்சி பெற வாய்ப்பு
அரசு விளையாட்டு விடுதிகளில் சேர, ஆர்வமுள்ள மாணவ, மாணவியர், வரும், 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்,
பள்ளி மாணவ, மாணவியர், விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்காக, நல்ல பயிற்சி, தங்குமிடம், உணவுடன் கூடிய, முதல்நிலை விளையாட்டு மைய விடுதிகள் நடத்தப்படுகின்றன. சென்னை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மாணவர்களுக்கும், சென்னை, ஈரோடு ஆகிய இடங்களிலும் மாணவியருக்கும் விடுதிகள் செயல்படுகின்றன.
இதில், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது.விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர், 2018- -19க்கான சேர்க்கைக்குரிய விண்ணப்பங்களை, இன்று முதல், மாவட்ட விளையாட்டு அலுவலர்களை அணுகி பெறலாம். மேலும், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேசிய, மாநில அளவில், வெற்றி பெற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும், 18ம் தேதி காலை, 8:00 மணிக்குள், மாநில தேர்வு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
Saturday, 7 July 2018
தோப்புக்கரணம்
ஒவ்வொரு மாணவரும், 10 தோப்புக்கரணம் போடுகின்றனர்.ஆசிரியர்கள் கூறியதாவது:அனைத்து பயிற்சிக்கும் முன்னோடியாக, தோப்புக்கரணம் திகழ்கிறது. இதை செய்வதால், அனைத்து நரம்பு மண்டலத்துக்கும், சீரான ரத்த ஓட்டம் கிடைத்து, மாணவர்கள் சுறுசுறுப்படைவர். காதை பிடித்து, உட்கார்ந்து எழும்போது, மூளை நரம்புகள் துாண்டப்படும்.இதனால், மூளை செயல்பாட்டை ஒருநிலைப்படுத்த முடியும்.
ஆட்டிசம் குறைபாடு தவிர்க்கப்படும்; கற்றல் குறைபாடு நிவர்த்திஆகும்.
தொடர் பயிற்சியால், வகுப்பு துவங்கும் முன்பே, அவரவர் வகுப்பறையில், மாணவர்கள், தாங்களாகவே ஆர்வமாக தோப்புக்கரணம் போடுகின்றனர். உடல்நிலை சரியில்லாவிடில், கட்டாயப் படுத்துவதில்லை. இதேபோல், நகம் வெட்டுதல், கைகளை சுத்தமாக கழுவுதல், என சுகாதாரத்துக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இதனால், எங்கள் மாணவர்களுக்கு, தலைவலி, வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் அறிகுறி ஏற்படுவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Thursday, 5 July 2018
இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட்டும்,கார்களில் செல்லும் நான்கு பேரும் சீட் பெல்ட்டும் போட வேண்டும் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Flash News : இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட்டும்,கார்களில் செல்லும் நான்கு பேரும் சீட் பெல்ட்டும் போட வேண்டும் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பைக் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதை கடைபிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயண பாதுகாப்பு குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி இனி பின்பக்க சீட்டில் அமர்ந்து இருப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆகும். மேலும் கார்களில் செல்லும் நான்கு பேரும் கட்டாயம் சீட் பெல்ட் போட வேண்டும். வானங்களில் முன்பக்க விளக்கின் நடுவில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும். அதேபோல் உயரதிகாரிகள், காவலர்களும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னை டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை சரியாக நடைமுறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி வரும் 27ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது
-
மாணவ சமுதாயம் : முன்னேற்றம் கொண்ட மாணவ சக்தி... தேர்வில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் பொது தமிழ்
-
அன்பான மாணவர்களுக்கு , தற்காலிகமாக மதிப்பெண் பட்டியல் : ( மார்ச் 2025 ) 12 வகுப்பு : 12.05.2025 10 வகுப்பு : 19.05.2025 11 வகுப்ப...