எங்கள் கனவின் மாமனிதன்
இன்றைய வாழ்க்கையில் பல போராட்டம் இருந்தாலும்,
உங்களை மனதில் நினைத்தால் போதும் மாபெரும் தாக்கம்
எழுச்சி ஏற்படும்.
உங்களின் வாழ்க்கை
எங்களின் புனித பயணம்
வரும் ஆண்டில்
இந்தியா 2௦2௦
புதிய மாற்றம் உள்ள இந்தியா உருவாக
நம் பாரத தூண்கள்
எல்லா மாநிலத்திலும்
வேகமாக, விவேகமாக, துடிப்புடன்
செயல் பட இருக்கிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது
நம் மாணவர்களின் மாற்றம்
உலகை திரும்பி பார்க்க வைத்த காலம்
நம் லட்சிய தந்தை
நம் விஞ்ஞானி தந்தை
முன்னால் ஜனாதிபதி
வாழ்ந்த வாழ்க்கை போதும்
இனி பல நூல்கள்
நம் இளைய தலை முறை
படைக்கும் காலம் வெகு தூரம் இல்லை
காலம் அவர்களின் கண்களில் கலாமாக வாழ்கிறது.
இந்தியா உயர
நம் மக்களின் தரம் உயரும்
நம் தலை முறையின் தாகம் உயரும்
நம் எதிர்கால சிந்தனை மேலோங்கி உயரும்
சாதனைகளை
சாதிக்க மாணவ செல்வங்களே
துடிப்போடு போராடு
துயில் கொள்ள காலம் இதுவல்ல
தூண்களாக மாற கலாம் சொன்ன காலம் இது
மூன்றாம் ஆண்டின் கண்ணீர்
அடுத்த ஆண்டின் வெற்றி
ஆனந்த கண்ணீராக மாறும்.
எழுந்து வா!
இளைய சமுகமே !
என்றும் அன்புடன்
மணலி பிரகாஷ்
No comments:
Post a Comment