வருங்கால தலைமுறை 2020
வளரும் மாணவ சமுதாயத்திற்க்கு ஒரு சவால்.
இன்று இருக்கும் உயர்ந்த பதவியில், யாரும் எளிதாக வந்தவர்கள் கிடையாது, தனது சோதனை காலத்தில் வந்த வேதனையை மனதில் நிலை நிறுத்தி கொண்டு, அனைத்து சவால்களையும் மிக சரியான அளவில் பயன் படுத்திக்கொண்டு சாதனைகளாக மாற்றி அமைத்து தனது புகழினை உலகிற்கு கொடுத்தவர்கள்.
தோல்வி ஒரு சாபம் அல்ல, அது ஒரு வரம்.
இன்றைய தோல்விகள் தான் நாளைய வரலாறு ஆகிறது.
ஆம்! தோல்வியின் சுவை கசப்புத்தான்.
அந்த கசப்பு தன்மை எவ்வளவு மாற்றத்தை உருவாக்கியது
நம் தேசத்தில் கடுமையான காய்ச்சல் மலைப்போல மனிதனை வாட்டி வதைக்கவில்லையா?
அந்த காய்ச்சலுக்கு கொடுக்க பட்ட மருந்து ஒன்றும் செயற்கை அல்ல, நம் இறைவன் கொடுத்த இயற்கை மருந்தான வேம்பு தான் அது. நம் மனது இயற்கையில் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. அவை கசப்பான அனுபவத்தை எதிர்கொள்ளும் போது தான் வெளிப்படுகிறது. தோல்வி என்ற கசப்பான மருந்தை உட்கொண்டு இருந்தால் அதன் விளைவு ஒரு மிகப்பெரிய வெற்றியாக தான் அமையும்.
நாம் அழுதால் நம் மனம் அழுது தாழ்வு மனப்பான்மையை அடைகிறது. இந்த தாழ்வுமனப்பான்மையை வளர்த்தால் நம் வாழ் நாள் முழுவதும் சோதனைகளால் தான் நிரம்பி இருக்கும்.
அன்றே திரு.வி.க பாடலில் கூறினார்.
நல்லவர் போல உலகம் மீது
நரியும் கழுகும் உலவும் போது
நம்மை இன்பம் நாடி வருமா?
உலகம் நிம்மதியாக வாழ விடுமா?
ஏமாத்தும் போர்வையிலே
ஏழைகளின் வேர்வையிலே
எக்காளம் போடுற கூட்டம்
மக்கள் எதிர்த்துக் கேட்ட எடுக்கணும் ஓட்டம்.
துணிந்தால் துன்பமில்லை
சோர்ந்துவிட்டால் இன்பமில்லை..
கசக்கும் வாழ்விலே கவலை வரும் போதிலே
இனிக்கும் குரல் எழுப்ப பறவை உண்டு
இந்த உலகத்திலே…
கவிஞரின் வரிகள் மனதை தொடுவது உண்மை.
எதுவுமே நிரந்தரம் இல்லாத
இந்த உலகில் உங்கள் துன்பம் மட்டும்
எப்படி நிரந்தரம் ஆகும்.
மாற்றம் ஒன்றே மாறாதது
நல்ல மனித பண்புகளே உயர்ந்தது
மனித ஒழுக்கமே தலைச்சிறந்தது
மணலி பிரகாஷ்
No comments:
Post a Comment