Friday, 29 June 2018

ஆசிரியர்கள் இனி தேர்வு முறையில் மாணவர்களுக்கு புதிய முறையில் பயிற்சி அளிக்க வேண்டும்!

ஆசிரியர்கள் இனி தேர்வு முறையில் மாணவர்களுக்கு புதிய முறையில் பயிற்சி அளிக்க வேண்டும்!

GOVERNMENT G.O.ORDER (EDUCATION)

FOR 10th & 11th & 12th Std Students and For Teachers also...

1) இனிவரும் தேர்வுகளில் BLUE PEN அல்லது BLACK PEN ஏதேனும் ஒன்றில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். இரண்டிலும் கலந்து எழுதக் கூடாது.

 2) இப்பொழுதிலிருந்து மாணவர்களை இம்முறையில் தயார் படுத்த வேண்டும் என்று கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

3)மேலும் இந்த ஆண்டிலிருந்து BLUE PRINT முறை முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது.

4) இனிமேல் BLUE PRINT முறைப்படி பாடம் நடத்தாமல் புத்தகத்தில் உள்ள அனைத்தையும் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5) இனிவரும் தேர்வுகளில் வினாக்கள் 20% புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்படும்.

6) மேலும் Competive Examல் கேட்பதைப்போல வினாக்கள் REASONING, UNDERSTANDING  முறையில் கேட்கப்படும்.

7) மேலும் CREATIVE மற்றும் HIGHER ORDER THINKING என்னும் முறைப்படி வினாக்கள் கேட்கப்படும்.

8) வினாத்தாள் Blue Print முறையில் இல்லாமல் மாணவர்கள் பாடத்தை முழுமையாக படித்து புரிந்து கொண்டு எழுதும் வகையில் Creative & Higher Order Thinking என்னும் முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும்.

9) எனவே ஆசிரியர்கள் இனிமேல் இப்பொழுதிலிருந்தே மாணவர்களை இம்முறையில் (Creative & Higher Order Thinking) தேர்வுக்கு தயார் படுத்துமாறும், அதற்கேற்ப ஆசிரியர்களைப் பாடம் நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10) இம்முறையை மாணவர்களை இப்பொழுதிலிருந்தே ( Term Test & Revision Test & Model Exam) பள்ளியில் நடைபெறும் தேர்வுகளில்  பின்பற்றச் செய்யுமாறு ஆசிரியர்களுக்கு அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது

பொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்''

பொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்'' - எச்சரிக்கை செய்யும் தேர்வுத்துறை!

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கடினமான கேள்விகள் கேட்டதும், தேர்வுத்தாள் திருத்தியபோது மதிப்பெண் அள்ளிப்போடுவதற்கு அணைபோட்டதும் ஏராளமான மாணவர்களை தனியார் சுயநிதிக் கல்லூரிகளை நோக்கிப் படையெடுக்கவைத்திருக்கிறது. 

இந்த நிலையில், அடுத்த ஆண்டு பொதுத்தேர்வில் சிந்தித்துப் பதிலளிக்கும்வகையில் 20 சதவிகிதக் கேள்விகள் இடம்பெறும் என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது தேர்வுத்துறை.

தேர்வுத்துறை

இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவில் 1,000 மதிப்பெண்ணுக்குமேல் பெற்றவர்கள் 11.23 சதவிகிதம் பேர். 900 - 1000 மதிப்பெண் வரை பெற்றவர்கள் 12.47 சதவிகிதம் பேர். 900 மதிப்பெண்ணுக்குக் குறைவாக பெற்றவர்கள் 75 சதவிகிதத்துக்கும் கூடுதலாக உள்ளனர். 1000 மதிப்பெண்ணுக்கும் குறைவாகப் பெற்ற மாணவர்கள் தற்போது தனியார் சுயநிதிக் கல்லூரியில் சேர கடுமையாகப் போராடிவருகின்றனர்.

`நடந்து முடிந்த பொதுத்தேர்வில், எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் கடினமான கேள்விகள் கேட்டதும், தேர்வுத்தாள் திருத்தும்போது மதிப்பெண் அள்ளி வழங்குவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதும் சுயநிதிக் கல்லூரிகளின் சேர்க்கைக்காக' என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டைத் தவிர்க்கும்விதமாக, ஆசிரியர்களுக்கு முன்னரே ஆலோசனை வழங்கும் சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது தேர்வுத்துறை. இதில், `அடுத்த ஆண்டு பொதுத்தேர்விலும் மாணவர்கள் யோசித்து பதிலளிக்கும் வகையில், 20 சதவிகிதம் கேள்விகள் இடம்பெறும். அதற்குத் தகுந்தாற்போல் மாணவர்களைத் தயார்செய்ய வேண்டும். மாணவர்கள் குறிப்பிட்ட பகுதியை மட்டும் படிக்காமல், பொதுத்தேர்வுக்குப் பாடப்புத்தகத்தின் அனைத்து பகுதிகளையும் முழுமையாகப் படிக்க வேண்டும்’ என்று ஆலோசனை வழங்கியிருக்கிறது

பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்புக்கு, ஏற்கெனவே உள்ள ப்ளூ பிரின்ட் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு இன்னமும் ப்ளூ பிரின்ட் முறையில் நடத்தப்படுகிறது. ப்ளூ பிரின்ட் முறையைப் பின்பற்றுவதால் மாணவர்கள் பாடப்புத்தகத்தை முழுமையாகப் படிக்காமல் தேர்ந்தெடுத்துப் படித்து அதிக மதிப்பெண் பெறுகின்றனர். இதனால், பதினொன்றாம் வகுப்பில் படிக்கும்போது தனியார் பள்ளிகள் குறிப்பிட்ட பாடப்பகுதியை மட்டும் நடத்தி முடித்து அதிக மதிப்பெண் பெற்றுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து பதினொன்றாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறையைக் கொண்டுவரப்பட்டது. மேலும் பத்தாம், பதினொன்றாம் வகுப்புக்கு ப்ளூ பிரின்ட் முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தில் படிப்பதால் அவர்களுக்கும் ப்ளூ பிரின்ட் முறை இருக்காது. இதனால் பாடப்புத்தகத்தை முழுமையாகப் புரிந்து படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும்.

Thursday, 28 June 2018

நீட் தேர்வில் மாணவி கீர்த்தனா

Flash News : மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு : நீட் தேர்வில் மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று பட்டியலில் முதலிடம்

வேதியியல் படிக்கிறேன் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கோவை மாணவி கீர்த்தனா ரவி முதலிடம்

தி இந்து

‘‘பொறியியல் படிக்க விருப்பமில்லை’’ - தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி பேட்டி
#வேதியியல் படிக்கிறேன்
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கோவை மாணவி கீர்த்தனா ரவி முதலிடம் பிடித்தார்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று (வியாழக்கிழமை) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இதில் கோவையை சேர்ந்த மாணவி கீர்த்தனா ரவி முதலிடம் பெற்றார். முதல் பத்து இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 10 மாணவ, மாணவியர் 200க்கு 200
முதலிடம் பிடித்த மாணவி கீர்த்தனா ரவி:

கோவை சாய்பாபா காலணியை சேர்ந்தவர் மாணவி கீர்த்தனா. இவருடைய தந்தை ரவி பொறியாளராக பணிபுரிகிறார். தாயார் பாலாம்பிகா ரவி பாலக்காட்டிலுள்ள பிஎஸ்எஸ் பி.எட். கல்லூரியில் முதல்வராக பணிபுரிகிறார். மாணவி கீர்த்தனா பாலக்காட்டில் உள்ள பிஎஸ்எஸ் குருகுலம் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தார். கேரளா பாடத்திட்டத்தில் படித்த இவர் 12-ம் வகுப்பில் 1200 மதிப்பெண்களுக்கு முழு மதிப்பெண்களையும் பெற்றார்.

முதலிடம் பிடித்த மாணவி கீர்த்தனா ரவி கூறும்போது, “தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் படித்து வருகிறேன். நேர்காணல் மூலம் நான் அந்த படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். பள்ளியில் படிக்கும்போது எனக்கு சிறந்த வேதியியல் ஆசிரியர் கிடைத்தார்.

வேதியியல் மீதான ஆர்வத்தை அந்த ஆசிரியர்தான் எனக்கு தூண்டி விட்டார். எனக்கு பொறியியல் படிக்க விருப்பமில்லை. இருந்தும் பொறியியல் படிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருந்தால் வேதியியல் பொறியியலைத் தான் தேர்ந்தெடுத்திருப்பேன். வேதியியல் படிப்பை தேர்ந்தெடுத்தது என்னுடைய விருப்பம் தான். என் பெற்றோருக்கு அதில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை” என்றார்.

Monday, 25 June 2018

+1 - சிறப்பு துணைத்தேர்வு: ஜூன் 28 முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

+1 - சிறப்பு துணைத்தேர்வு: ஜூன் 28 முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

பிளஸ் 1 சிறப்பு துணைத்தேர்வுக்குஜூன் 28 முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Sunday, 24 June 2018

ஜூன் 30க்குள் ஆதார் - பான் எண் இணைக்காவிட்டால், வருமானவரி தாக்கல் செய்ய முடியாது?: மத்திய அரசு

ஜூன் 30க்குள் ஆதார் - பான் எண் இணைக்காவிட்டால், வருமானவரி தாக்கல் செய்ய முடியாது?: மத்திய அரசு

ஏற்கெனவே நீட்டிக்கப்பட்ட அவகாசமான ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஆதார் - பான் எண்களை இணைக்காவிட்டால், வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. 

வருமானவரிச் சட்டப்பிரிவு 139 AA உட்பிரிவு இரண்டின் படி, ஜூலை 1, 2017 அன்று பான் வைத்திருப்பவர்கள்,  ஆதார் எண்களை வரித்துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்துவது கட்டாயமாகும்.

வருமானவரிக் கணக்குத் தாக்கலுக்காக பான் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கூறிய மத்திய அரசு அதற்கான அவகாசத்தை ஏற்கெனவே 4 முறை  நீட்டித்தது. ஜூன் 30-ஆம் தேதி அன்று அவகாசம் முடியும் நிலையில், அதற்குள் ஆதார் - பான் எண்களை இணைக்காவிட்டால், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. 

Tuesday, 19 June 2018

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான கண்காட்சி: சென்னையில் நாளை தொடக்கம்

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான கண்காட்சி: சென்னையில் நாளை தொடக்கம்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம்சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் வழங்குவதற்கான மாநில அளவிலான இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி, சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள களிபட்டூரில் புதன்கிழமை தொடங்கவுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை படிக்கும் இளம் மாணவர்களில், அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் திட்டமே இன்ஸ்ஃபையர் ' விருதுத் திட்டமாகும்.

ரூ.10,000 பரிசுத் தொகை:

 இதற்காக ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதும், ரூ.10,000 பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிப் போட்டிகளில் கலந்து கொள்வர். பின்னர் மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டிகள் நடைபெறும். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை இந்தச் செயல்பாடுகளுக்கான செலவுகளை ஏற்றுக் கொள்கிறது.தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், தமிழகத்தில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுப் பணிகளை நிறைவேற்றி வருகிறது. 2017-18 -ஆம் கல்வியாண்டுக்கு மாவட்ட அளவில் தேர்வுசெய்யப்பட்ட 232 மாணவர்கள், ஜூன் 20, 21 ஆகிய நாள்களில் காஞ்சிபுரம், ஆனந்த் உயர்தொழில்நுட்பக் கழகம், கலசலிங்கம் நகர், ராஜீவ் காந்தி சாலை, களிபட்டூர், சென்னை-603 103'' என்ற முகவரியில் உள்ள நிறுவன வளாகத்தில் நடைபெறும் மாநில அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர். இதில் 23 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதுதில்லியில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள புத்தாக்க அறிவியல் ஆய்வுவிருதுக்கான போட்டிகளில் கலந்து கொள்வர்.

அமைச்சர் தலைமையில்:

 இந்தக் கண்காட்சிஉயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் புதன்கிழமை (ஜூன் 20) காலை 8.30 மணிக்கு ஆனந்த் உயர்தொழில்நுட்பக் கழக வளாகத்தில் நடைபெறும். 
இதில் உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பி.பொன்னையா, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன்,தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் ச.சௌந்தரராஜ பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றர்.

மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் அவகாசம்

மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் அவகாசம்

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், மாணவர் சேர்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், பல்வேறு பட்டப்படிப்புகள், சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.
சேர்க்கைக்கான தேதி முடியவிருந்த நிலையில், வரும், 25ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. 
படிப்பில் சேர விரும்புவோர், பல்கலை வளாகத்தில் உள்ள, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையத்தை, சனி, ஞாயிறு உள்ளிட்ட, அனைத்து நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், https://www.ideunom.ac.in என்ற இணையதளம் வாயிலாகவும், விண்ணப்பங்களை அளிக்கலாம் என, சென்னை பல்கலை பதிவாளர்,சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு துணை தேர்வு நாளை, 'ஹால் டிக்கெட்'

10ம் வகுப்பு துணை தேர்வு நாளை, 'ஹால் டிக்கெட்'

பத்தாம் வகுப்பு, சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், நாளை முதல், 'ஹால் டிக்கெட்'டைபதிவிறக்கம் செய்யலாம்.
பத்தாம் வகுப்புக்கான, மார்ச் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து பங்கேற்காதவர்களுக்காக, சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது

Monday, 18 June 2018

Vedic Mathematics - Easy To learn Tables

Vedic Mathematics - Easy To learn Tables

10ம்வாயப்பாடு முதல்--99-ம் வாய்ப்பாடு வரை பள்ளிகள் சொல்லிக்கொடுக்காத இந்த வேதிக் முறையை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்

 I didn't know this. Because it was not taught to us in school.

How to write Table of any two digit number?

For example Table of  *87*

First write down *table of 8 then write down table of 7 beside it*

  8            7                    87
16         14    (16+1)    174
24         21    (24+2)    261
32         28    (32+2)    348
40         35    (40+3)    435
48         42    (48+4)    522
56         49    (56+4)    609
64         56    (64+5)    696
72         63    (72+6)    783
80         70    (80+7)    870

Now table of 38

  3         8                   38
  6       16   (6+1)      76
  9       24   (9+2)    114
12       32   (12+3)  152
15       40   (15+4)  190
18       48   (18+4)  228
21       56   (21+5)  266
24       64   (24+6)  304
27       72   (27+7)  342
30       80   (30+8)  380
33       88   (33+8)  418
36       96   (36+9)  456

Now table of 92

    9         2                     92
  18         4                  184
  27         6                  276
  36         8                  368
  45       10      (45+1)460
  54       12      (54+1)552
  63       14      (63+1)644
  72       16      (72+1)736
  81       18      (81+1)828
  90       20      (90+2)920
  99       22      (99+1)1012
108       24      (108+2)1104

This way one can make Tables from10 to 99

Share & teach children

This is Vedic Mathematics!!.

Thursday, 14 June 2018

பிளஸ் 2 துணை தேர்வு 19ல், 'ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 துணை தேர்வு 19ல், 'ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பித்தோர், வரும், 19ம் தேதி முதல், 'ஹால் டிக்கெட்' பெறலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்த மாதம் துவங்க உள்ள, பிளஸ் 2 மாணவர்களுக்கான, சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்தோர், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும், 19ம் தேதி பிற்பகல் முதல், ஹால் டிக்கெட் பெறலாம்.பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்யலாம்.

ஹால் டிக்கெட் இல்லாத தேர்வர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.செய்முறை தேர்வில், குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி பெறாதோர், செய்முறை தேர்வு மற்றும் எழுத்து தேர்வு இரண்டிலும், கட்டாயம் பங்கேற்க வேண்டும். செய்முறை தேர்வுக்கு, 200 மதிப்பெண் உள்ள, தொழிற்கல்வி மாணவர்கள், மீண்டும் செய்முறை தேர்வுக்கு வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, 10 June 2018

17 வயதில் மாவட்ட ஆட்சியர் ஆன மாணவி..! இந்தியாவில் முதல் முறையாக

17 வயதில் மாவட்ட ஆட்சியர் ஆன மாணவி..! இந்தியாவில் முதல் முறையாக..
Seithi Puna 10 Jun. 2018 11:07
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 12-ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியை மாவட்ட ஆட்சியராக நியமித்து, அம்மாணவியின் மாவட்ட நிர்வாகம் கொண்டாடியுள்ளது.
அந்த மாணவியின் மாவட்ட ஆட்சியர் கனவை ஒரு நொடியில் நிறைவேற்றிய மாவட்ட நிர்வாகத்தை அம்மாநிலமே பாராட்டி வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் பெரும்பாலான மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜுன்ஜுன் மாவட்டத்தைச் சேர்ந்த ''வந்தனா குமாரி'' என்ற மாணவி முதலிடம் பிடித்தார். இதனை எடுத்து செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுத்தனர், அதில் அவர் கூறும் பொது, ''நான் சிறு வயது முதலே மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்தேன். அதனாலேயே என்னால் முதல் மதிப்பெண் எடுக்க முடிந்ததாக'' தெரிவித்தார்.
இந்நிலையில், அம்மாணவியின் பேட்டியை பார்த்த ஜுன்ஜுன் மாவட்டத்தின், மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், மாணவி வந்தனா குமாரியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து, அம்மாணவியை மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமரவைத்து கவுரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்ததாவது, ''நம் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி வந்தனா குமரியின் மாவட்ட ஆட்சியர் கனவை தெரிவித்திருந்தார். அவரின் இந்த உயர்ந்த கனவை ஊக்குவிக்க முடிவு செய்து. அவரை ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக என் இருக்கையில் அமர வைத்து, மாவட்ட அலுவலக பணிகளை மேற்கொள்ள வைத்துள்ளேன். இதனால் அம்மாணவி இன்னும் உத்வேகத்துடன் தனது கனவை நிறைவேற்ற செயல்படுவார் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

Saturday, 9 June 2018

10th - எஸ்எஸ்எல்சி சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க

10th - எஸ்எஸ்எல்சி சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஜுன் 11, 12-ல் கடைசி வாய்ப்பு: சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

எஸ்எஸ்எல்சி சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

``எஸ்எஸ்எல்சி துணை பொதுத்தேர்வு ஜுன் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறி தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கடந்த மார்ச் மாதம் நடந்த10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளி மாணவராகவோ அல்லது தனித்தேர்வராகவோ எழுதியிருக்க வேண்டும். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் விண்ணப்பித்துவிட்டுத் தேர்வு எழுதாத அனைத்துப் பாடங்களையும் உடனடி தேர்வில் எழுத விண்ணப்பிக்கலாம்.

இந்த சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஜுன் 11, 12 (திங்கள், செவ்வாய்) ஆகிய நாட்களில் பதிவுசெய்துகொள்ள வேண்டும். மார்ச் மாத தேர்வு எழுதியவர்கள் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகலையும், தேர்வு எழுதாதவர்கள் தங்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை விண்ணப்பம் பதிவுசெய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண் டும்.

தேர்வுக்கட்டணம் ரூ.125. சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.500 ஆக மொத்தம் ரூ.625. தேர்வுக்கட்டணத்தை முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பண மாக செலுத்த வேண்டும்.சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்வு மையம் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே அமைக்கப்படும். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு பதி விறக்கம் செய்ய வேண்டியநாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு

இதேபோல், ஜுன் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ள பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களும் சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதி காரி அலுவலகத்தில் ஜுன் 11, 12 ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.50 மற்றும் இதர கட்டணம் ரூ.35. அதோடு சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000, பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டணத்தை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Saturday, 2 June 2018

1,6,9,11 std - New Text Books Download Now via tnscert ebooks link

1,6,9,11 std - New Text Books Download Now via tnscert ebooks link

புதிய பாடநூல்கள் (1,6,9,11) இணையத்தில் கிடைக்கின்றன. File size கொஞ்சம் அதிகம். ஆனால் ஒவ்வொரு புத்தகமும் அட்டகாசமாக வந்துள்ளது. பார்த்து மகிழவும்...

Click here - New Text Books Download Now via tnscert ebooks link

TNPSC - குரூப் 1 தேர்வெழுதும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான வயது வரம்பு 37-ஆக அதிகரிப்பு: முதல்வர் அறிவிப்பு

TNPSC - குரூப் 1 தேர்வெழுதும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான வயது வரம்பு 37-ஆக அதிகரிப்பு: முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். டி.என்.பி.எஸ்.இ குரூப் 1 தேர்வெழுதுபவர்களின் வயது வரம்பை அதிகரித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.இ குரூப் 1 தேர்வெழுதும் எஸ்.சி, எஸ்.டி, பி.சி., எம்.பி.சி பிரிவினருக்கு வயது வரம்பு 35-லிருந்து 37-ஆகவும், இதர பிரிவனருக்கு 30-லிருந்து 32-ஆகவும் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப கட்டடம்

கோயம்புத்தூரில் ரூ.100 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப கட்டடம் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும் திருச்சியில்​ ரூ.40  கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டடம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி 110-ன் கீழ் அறிவித்துள்ளார்.

மாதிரி பள்ளிகள்

32 மாவட்டங்களில் ரூ.16 கோடியில் மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். மாவட்டத்துக்கு ஒரு பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வன அலுவலர்களுக்கு பயிற்சி

ரூ.2 கோடியில் வனத்துறை அலுவலர்களுக்கு காட்டுத்தீ கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்பது குறித்து வன அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் கூறியுள்ளார்.

01.01.2026 Happy New Year