Wednesday, 16 January 2019

நம் எண்ணங்கள் சில சமயம்


வருங்கால தலைமுறை 2020
என் இனிய வாசகர்களுக்கு வணக்கம்,
நம் எண்ணங்கள் சில சமயம் நெருக்கடியான சூழ்நிலைகளை உருவாக்குகிறது. வாழ்விலும், வியாபாரத்திலும் திட்டமிட்ட நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்கின்றன. எந்த அளவு கீழே விழுவோம் என்பதை விட எந்த அளவு விரைவாக மேலே எழுவோம் என்பது தான் முக்கியம். நெருக்கடியான நேரங்களில் வெற்றிபெறுவது எப்படி என்பதை எடுத்துரைக்கும். நடைமுறை உத்திகளைப் பயன்படுத்தி வெற்றி பெறுவது பற்றி வேகமாகவும், முடிவாகவும், முழுமையாகவும் செயல்பட வேண்டும்.
உணர்வுகளை கட்டுப்படுத்தி சரியான கேள்விகள் கேட்பதன் மூலம் தீர்வுகள் காண வேண்டுமே தவிர உணர்வு பூர்வமாக ஒரு தீர்வை அடைய முடியும் என நம்புவர்கள் கானல் நீரை அடைய முயற்சிப்பதற்கு சமமாகும்.
ஏற்கனவே நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து எந்த சூழ்நிலையிலும் எந்த பிரச்சினைகளையும் சமாளிக்க கூடிய திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு மோசமான முடிவும் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகளை ஏற்றுக் கொண்டு அவை நிகழாவண்ணம் செயல்படவேண்டும்.
வெற்றியும் தோல்வியும் தொடர்ச்சியாக நிகழ்வன அல்ல.
மாறி மாறி நடக்கும்போது வேறு வேறு விளைவுகள் ஏற்படும் என்பதை உணர வேண்டும்.
நடந்ததை எண்ணி அவைகளை மேற்கோள் காட்டி பேசுவதைத் தவிர்க்க வேண்டும். நூறு விழுக்காடு எந்த ஒரு பிரச்சினையையும் எதிர்கொண்டு அடுத்தவரை குறை கூறாமல் நிகழ்வுகளை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது ஒரே ஒரு வழிதான் என்ற எண்ணத்தை மாற்றவேண்டும் அந்த பிரச்சினைக்கு எந்த அளவு விதவிதமான வித்தியாசமான தீர்வுகள் இருக்கும் என்பதை உணர வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் நன்று. ஏனென்றால் எந்த ஒரு இடத்துக்கும் நிச்சயமாக மாற்று வழி இருந்தே ஆக வேண்டும்.
உள்மனதின் கருத்துகள் பெரும்பான்மையான நேரங்களில் கேட்கப்படுவதில்லை. மாறாக ஆழ் மனதில் தோன்றும் சிறிய கருத்து முக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக்கொள்ளும் கருத்து நெருக்கடிகளை நேர்காண உற்ற துணையாக இருந்து உதவும்.
வெல்லும்வரை விடக்கூடாது என்ற மனப்பாங்கு வெகுவானவர்களிடம் இருப்பதில்லை. இன்னும் சிறிது தூரம் மேலே ஏறி இருந்தால் பள்ளத்தில் இருந்து நிலப்பரப்புக்கு வந்து விடலாம். ஆனால், அந்த கடைசி நான்கு அல்லது ஐந்து அடி உயரம் ஏறுவதில் மனம் தளரும்போது நிலப்பரப்பை அடைவது கனவாக முடிகிறது. ஆக வெல்லும் வரை விடக்கூடாது என்பது நெருக்கடிப் பணியை உருகச் செய்யும் மனப்பாங்காகும்.
பலம் மற்றும் பலவீனம் என்பது இரு கூறுகளாக மனிதர்களை பிரிக்கின்றது. பலம் என்பது ஒருவர் விடாப்பிடியாய் ஒரு கருத்தை ஏற்பது. பலவீனம் என்பது ஒரு கருத்தை தயக்கத்துடனும், தடுமாற்றத்துடனும், அற்ப காரணங்களுக்காகவும் தவிர்த்து பிரச்சினைகளில் மூழ்கிவிடுதல் ஆகும்.
எதை, எப்பொழுது, எங்கே, எவ்வாறு சரியாக செய்வது என்பதில் தான் வெற்றியின் சூட்சமம் அடங்கி உள்ளது. அவ்வாறு செய்பவர்கள் நெருக்கடிகளை நேர்கொண்டு பஞ்சாக ஊதிவிடுவார்கள்.
முயற்சி இல்லாத லாபம், பயம் இல்லாத அனுபவம், வெகுமதி இல்லாத வேலை இவை அனைத்தும் பிறக்காமலே வாழ்வதற்கு ஒப்பாகும். இது மிகைப்படுத்தபட்ட கூற்று அல்ல.
மேலே கூறிய இந்த கருத்துகளை பிரையின் டிரேசி, ஒருவர் எவ்வாறு நெருக்கடிகளை நேர்கொண்டு, பிரச்சினைகளை எதிர்கொண்டு தொடர்ந்து போராடி அவைகளை கட்டுக்குள் கொண்டுவருவது என்பதை பற்றி விளக்கமாக கூறியுள்ளார்.


*மணலி* பிரகாஷ்

No comments:

Post a Comment

01.01.2026 Happy New Year