அதிசயம்
காற்றோடு கலந்து உறவாடும்
மரங்களின் தோற்றம்.
கட்டணம் பெறாமல் ஒளி சிந்தும்
நிலவின் தோற்றம்
விவசாயிக்கும் விசிறி வீசும்
தென்றலின் தோற்றம்
கண்ணில் அடங்காக் கடலை உருவாக்கும்
ஆறுகளின் தோற்றம்.
சிறிய மூலையிலும் பெரிய வேலை இருக்கும்
எறும்புகளின் தோற்றம்
ஊருக்கு உழைப்பதை உபதேசம் செய்யும்
தேனீக்களின் தோற்றம்
வாழ்வு இழந்து அலங்கரித்து நிற்கும்
மலர்களின் தோற்றம்
இறந்த பின்னும் இரையாய் மாறும்
மீனின் தோற்றம்
கடல் நீரை ஆவியாய்ச் சுமக்கும்
மேகத்தின் தோற்றம்
செயற்கையால் செய்ய முடியாத
சூரியனின் தோற்றம்
எத்தனை எத்தனை தோற்றம்
மாற்றம் என்பது
மானிடத் தத்துவம்
தோற்றம் என்பது
இயற்கையின் தத்துவம் .
- மணலி பிரகாஷ்
No comments:
Post a Comment