Thursday, 14 February 2019

நல்ல சிந்தனைகள்

முன்பின் தெரியாதவர்களை அன்புடன்
உபசரித்தால் கடவுளுக்கு சந்தோஷம் ஏற்படும் –பைபிள்

நற்செயல் என்ற நிலத்தை சீர்படுத்து அதில்
இறைவன் திருநாமம் என்ற விதையைத் தூவு –குருநானக்

தர்மத்தில் நிலைத்து நிற்பவர்கள்
ஒரு போதும் துன்புறுவதில்லை –மகாபாரதம்

நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருங்கள்
"வெற்றி பெறவே பிறந்தோம்" என்று நம்புங்கள். "தோற்க அல்ல".–தோரா

பிரச்சினைகளோடு போராடி அவற்றை
வெல்வது தான் மனிதத் திறமையின்
உச்சக்கட்டம்  - Dr. சாமுவேல் ஜான்சன்

தன்னம்பிக்கை இருப்பின்
தேடும் பொருள் கிடைத்தே தீரும்  - ஸ்ரீ ராம கிருஷ்ணர்

விழுவது தவறு அல்ல
விழுந்து கிடப்பது தான் தவறு, எழு –சுவாமி விவேகானந்தர்


கடவுளை நம்பு, ஆனால் உன் கடமையைச்
செய்ய தவறாதே –முகம்மது நபி

தன்னம்பிக்கையே வெற்றியின் அடிப்படை ரகசியம்  - எமர்சன்

நீங்கள் உழைக்கிற நேரம்தான் உங்கள் வாழ்கையிலேயே மிகவும் சந்தோசமான நேரமாக இருக்க முடியும் –Dr. W..H. பிபான்ஸ்

உழைப்பினால் கிடைத்த சொந்த பொருளுக்கு உள்ள சிறப்பு
கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது  - ஹென்றி போர்டு

எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக
மாற்றுபவன் எவனோ அவனே அறிவாளி –விவேகானந்தர்

சிறு விஷயத்தில் தவறாக நடப்பவன் 
பெரிய விஷயத்திலும் தவறாக நடப்பான்  - இயசு நாதர்

பயனுள்ள தொழில் ஒரு தங்க சுரங்கம்  - கார்லைல்

பணத்தின் தாய் தொழில்  - ஜான் ரே

சோர்வு என்பது மனிதனைக் கொள்ளும்  நஞ்சு –திரு.வி.க.

No comments:

Post a Comment

01.01.2026 Happy New Year